வங்காளதேசத்தில் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை மூன்று லட்சத்தை தாண்டியுள்ளது.
உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் நாடு முழுவதும் மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தி மனித பலியை வாங்கி வருகின்றது. இந்நிலையில் உலகம் முழுவதும் 2 கோடிக்கும் அதிகமானோர் தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில் 8 லட்சத்துக்கும் அதிகமானோர் இந்த கொடிய வைரசால் உயிரிழந்துள்ளனர். இந்த வைரஸின் தாக்கம் வங்காள தேசத்திலும் அதிகமாக காணப்படுகிறது.
இந்நிலையில் வங்காளதேசத்தில் 3 லட்சத்திற்கும் அதிகமானோர் இந்த தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று ஒரே நாளில் மட்டும் 2,519 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனால், பாதிப்பு எண்ணிக்கை 3,02,147 ஆக உயர்ந்துள்ளது. மேலும், அங்கு வைரஸ் தாக்குதலுக்கு 54 பேர் பலியானதை தொடர்ந்து, பலியானவர்களின் எண்ணிக்கை 4,082 ஆக உயர்ந்துள்ளது. மேலும் இந்த கொடிய கொரோனாவில் இருந்து 1.90 லட்சத்துக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளதாக அந்நாட்டு சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. உலக அளவில் 15வது இடத்தில் வங்காளதேசம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.