கேரளாவில் இன்று மட்டும் 2,476 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
கேரளாவில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது. அதனைத் தொடர்ந்து கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ” கேரளாவில் இன்று ஒரே நாளில் மட்டும் 2,476 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் கொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 41,694 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அதே சமயத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு 22,344 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்” என்று கூறியுள்ளது.