டிரம்பின் மனைவி அடுத்த நான்கு வருடங்களுக்கு அதிபராக டிரம்ப் இருந்தால்தான் அது அமெரிக்காவிற்கு நல்லது என கூறியுள்ளார்.
கிழக்கு ஐரோப்பிய நாடான ஸ்லொவேனியாவில் பிறந்து வளர்ந்த, அதிபர் டொனால்டு டிரம்பின் மனைவி மெலனியா டிரம்ப் வெள்ளை மாளிகையில் இருந்தவாறு காணொளி வாயிலாக உரையாற்றியபோது, கம்யூனிச ஆட்சியில் இருந்து கொண்டு ஸ்லோவேனியாவில் வளர்ந்து வந்த போது அமெரிக்காவில் உள்ள சுதந்திரம் மற்றும் வாய்ப்புகள் பற்றி கேள்விப்பட்டு, 26 வயதில் அமெரிக்காவிற்கு வந்ததாகவும், அதிபர் டிரம்ப் நாட்டில் முன்னேற்றத்தைை கொண்டு வர வேண்டும் என்று நினைப்பவர் எனவும் அவர் கூறினார்.
மேலும் அமெரிக்காவை சிறந்த நாடாக மாற்ற வேண்டும் என்று நினைப்பது மட்டுமில்லாமல், கொரோனா காலகட்டத்தில் தடுப்பு மருந்து அனைவருக்கும் கிடைக்க வேண்டுமென்று டிரம்ப் அரசு மிகவும் போராடி வருகிறது. நான் டிரம்பை சந்தித்த நாளிலிருந்து குறுகிய காலகட்டத்தில் பல்வேறு சாதனைகளை நிகழ்த்திக் காட்டியது நினைத்து பெருமைபட்டிருக்கிறேன். எனவே அடுத்த நான்கு வருடங்களுக்கும் டிரம்ப் தான் அதிபராக வலம் வருவார் அதுதான் அமெரிக்காவிற்கு நல்லது என்றும் மெலனியா தெரிவித்துள்ளார்.