சிம்மம் ராசி அன்பர்களே… !இன்று நிதானமான அறிவாற்றலும் சமயத்திற்கு ஏற்றாற்போல் குணத்தை மாற்றிக் கொள்ளும் தன்மையும் கொண்ட உங்களின்ராசிக்கு நல்ல பலன்களை தரக்கூடிய அமைப்பாகும். உடல் ஆரோக்கியத்தில் சற்று மந்த நிலை கை, கால், அசதி, சோர்வு போன்றவை ஏற்பட்டாலும் அன்றாடப் பணிகளை முடிப்பதில் எந்த ஒரு சிக்கலும் ஏற்படாது. தாராள தன வரவுகளால் குடும்பத்தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும்.
ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தடை மற்றும் தாமதத்திற்குப்பின் அனுகூலமான பலன் உன்டாகும். கணவன், மனைவி வீண் வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. உற்றார் உறவினர்களின் ஆதரவு ஓரளவிற்கு மகிழ்ச்சியளிக்கும்.
இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை: வடக்கு
அதிர்ஷ்டமான எண்: 4
அதிர்ஷ்டமான நிறம்: நீல நிறம்