Categories
உலக செய்திகள்

“போலியோ”.. இன்னும் இந்த 2 நாட்டுல மட்டும் இருக்கு…!!

போலியோ நோயை பல்வேறு நாடுகள் வென்று வரும் நிலையில் இரு நாடுகள் மட்டும் இந்த நோய் தாக்கத்தை பெற்று வருவதாக சுகாதார அமைப்பு தெரிவிக்கிறது.

1952 ஆம் ஆண்டு, போலியோ என்ற இளம் பிள்ளை வாதம் என்ற கொடூர நோய் கண்டுபிடிக்கப்பட்டு உலகையே உலுக்கிக் கொண்டிருந்தது. இந்நோயிற்குத் தடுப்பூசி மருந்து கண்டறிவதற்குள் பல நாடுகளில் பரவ தொடங்கி பெரும்பாலும் குழந்தைகளை தாக்க ஆரம்பித்தது. இந்நோயிக்கு எதிராக உலக சுகாதார அமைப்பு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வந்தது. அதன்பின் இந்த நோய்க்காக கண்டுபிடிக்கப்பட்ட தடுப்பூசி மருந்து போலியோ சொட்டு மருந்தாக இன்று வரை பல நாடுகளில் வழங்கப்பட்டு வருகிறது.

இருந்தாலும் இந்த கொடிய நோய், உலகிலேயே பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், ஆப்பிரிக்க நாடுகளில் மட்டும் இருந்து வந்தது. சென்ற 1996ஆம் ஆண்டில், ஆப்பிரிக்காவில் மட்டும் 75 ஆயிரம் குழந்தைகள் போலியோவால் பாதிக்கப்பட்டிருந்தனர். அதன்பின் அந்நாட்டு அரசுகள் தீவிரமாக களத்தில் இறங்கி போலியோவை அடியோடு ஒழித்து விட்டதாக சுகாதார அமைப்புகள் தெரிவிக்கின்றன.

இந்த நோய் குறித்து  உலக சுகாதார அமைப்பு ஆப்பிரிக்கா இயக்குனர் மாட்சிடிசோ மொயெட்டி கூறுகையில், “இன்று ஆப்பிரிக்காவின் வரலாற்றில் சிறப்புமிக்க நாள். கடந்த 4 வருடங்களாக ஆப்பிரிக்காவில் போலியோ பாதிப்பு யாருக்கும் ஏற்படவில்லை. போலியோவிலிருந்து ஆப்பிரிக்கா முற்றிலுமாக விடுபட்டுள்ளது. ஆப்பிரிக்காவிலிருந்து முற்றிலும் அழிக்கப்பட்ட பெரியம்மையுடன் போலியோவும் தற்போது இணைகிறது” எனத் தெரிவித்துள்ளார். தற்போது போலியோவால் பாதிக்கப்பட்ட நாடுகளில் பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் மட்டும் தான் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |