மகரம் ராசி அன்பர்களே…! இன்று இரக்க குணம் அதிகமிருக்கும். உங்களுடைய ராசிக்கு கணவன் மனைவி ஒற்றுமை சிறப்பாக இருக்கும். வீண் செலவுகளைத் தவிர்ப்பது நல்லது. கடன்கள் சற்று குறையும். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வது மிகவும் நல்லது. அசையும், அசையா சொத்துக்கள் வாங்கும் விஷயங்களில் சிந்தித்து செயல்படுவது மிகவும் நல்லது.
பணம் கொடுக்கல் வாங்கல் போன்றவற்றில் எதிர்பார்த்த லாபத்தைப் பெறமுடியும் என்றாலும், பெரிய தொகைகளை யாருக்கும் கடனாகக் கொடுப்பதைத் தவிர்த்து விடுங்கள். மாணவர்கள் கல்வியில் நல்ல முன்னேற்றம் பெற சற்று கடின முயற்சிகளை மேற்கொள்ள வேண்டியிருக்கும். விஷ்ணு பகவானை வழிபாடு செய்தால் வாழ்க்கையில் பல நன்மைகள் உண்டாகும்.
இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை: வடக்கு
அதிர்ஷ்டமான எண்: 5
அதிர்ஷ்டமான நிறம்: மஞ்சள்.