Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

கடலூரில் புதிய திட்ட பணிகள்… அடிக்கல் நாட்டிய முதலமைச்சர்…!!!

கடலூர் மாவட்டத்தில் ரூ.32.16 கோடி மதிப்பிலான புதிய திட்ட பணிகளுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அடிக்கல் நாட்டி வைத்துள்ளார்.

தமிழகத்தில் அதிகரித்துக் கொண்டிருக்கும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பல்வேறு மாவட்டங்களுக்கு சென்று நேரில் ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த நிலையில் இன்று கடலூர் மாவட்டத்திற்கு சென்ற முதலமைச்சர், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த கொரோனா தடுப்பு பணிகள் குறித்த ஆய்வு கூட்டத்தில் கலந்து கொண்டார். அதன் பிறகு ரூ.32.16 கோடி மதிப்பிலான புதிய திட்ட பணிகளுக்கு முதலமைச்சர் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்துள்ளார். அதன் பின்னர் பேசிய அவர், ” இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் தமிழகத்தில் மட்டுமே அதிக பரிசோதனை செய்யப்பட்டு வருகின்றது.

அதே சமயத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை தமிழகத்தில் மட்டுமே அதிகமாக உள்ளது. தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் அனைத்தும் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. கடலூர் மாவட்டத்தில் அதிக அளவு தடுப்பணைகள் கட்டப்பட்டுள்ளன. கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே ரூ.495 கோடியில் கதவணை கட்டும் பணிகள் 40 சதவீதம் நிறைவடைந்துள்ளன. மேலும் கடலூர் மாவட்டத்தில் சாலை வசதிகளை மேம்படுத்துவதற்கு அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன. அதே சமயத்தில் பரட் ஆயிரத்திற்கும் மேற்பட்ட இலவச வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன.

மேலும் 1,554 மகளிருக்கு மானிய விலையில் இருசக்கர வாகனங்களும் வழங்கப்பட்டுள்ளன. மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ. 225 கோடி சுழல் நிதி வழங்கப்பட்டுள்ளது. தினந்தோறும் 300க்கும் மேற்பட்ட காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றது. நடமாடும் பரிசோதனை மையங்கள் மூலமாக கொரோனா பாதிப்பு உடனடியாக கண்டறியப்படுகின்றது. கொரோனாவிற்கு எதிராக போராடிக் கொண்டிருக்கும் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் முன்கள பணியாளர்கள் அனைவருக்கும் என் பாராட்டுக்கள்” என்று அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |