Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

சென்னையில் மீண்டும்… போடு ரகிட.. ரகிட..!!

கோயம்பேடு மார்க்கெட் அடுத்த மாதம் திறக்கப்பட உள்ளதாக சிஎம்டிஏ தெரிவித்துள்ளது.

கொரோனா பரவல் தமிழகத்தில் பெரும்பாலும் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் வேகமாக பரவி வந்தது. இந்த பரவல் சென்னை கோயம்பேடு சந்தையில் இருந்து வந்ததாக ஆய்வாளர்கள் கூறியதால் இந்த சந்தை தற்காலிகமாக திருமழிசைக்கு மாற்றப்பட்டு செயல்பட்டு வருகின்றது. ஆனாலும் வியாபாரிகள் மற்றும் வணிகர்கள் தொடர்ந்து கோயம்பேடு சந்தையை திறக்க வேண்டும் என்று வலியுறுத்தி வந்ததால், தற்போது அதுகுறித்த தகவலை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

வெளியிட்டுள்ள அந்த தகவலில், சென்னை கோயம்பேடு மார்க்கெட் செப்டம்பர் 15ஆம் தேதி திறக்கப்பட இருப்பதாக சிஎம்டிஏ தெரிவித்துள்ளது. மார்க்கெட் திறப்பது குறித்து காலை 11 மணிக்கு துணை முதல்வர் பன்னீர்செல்வம் ஆய்வு செய்கிறார். அதன் பிறகு 12 மணிக்கு வணிகர் சங்கத்தினருடன் ஆலோசனை நடத்துகிறார். ஆனால் அதற்கு முன்னரே சிஎம்டிஏ இந்த தகவலை தெரிவித்துள்ளதால் மக்கள் மற்றும் வியாபாரிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

Categories

Tech |