Categories
தேசிய செய்திகள்

“இந்தியாவுக்கு அதிக வாய்ப்பு இருக்கு” – அமைச்சர் ஜெய்சங்கர்

இஸ்ரேல் மற்றும் ஐக்கிய அமீரகம் செய்துகொண்ட அமைதி ஒப்பந்தத்தில் இந்தியாவிற்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாக வெளியுறவுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இஸ்ரேலும் ஐக்கிய அரபு அமீரகமும் மேற்கொண்டுள்ள அமைதி ஒப்பந்தத்தால் அபுதாபிக்கும் டெல்லிக்குமான நட்பு வலிமைப்பட்டு வருவதால் இந்தச் சூழல் இந்தியாவிற்கு  ஏராளமான வாய்ப்புகள் உருவாக வழிவகுத்துள்ளது. மேலும் இந்தப் புதிய நடவடிக்கையை வரவேற்பதாகவும்,  இதற்காக இஸ்ரேலும் பாலஸ்தீனமும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெயசங்கர் கேட்டுக்கொண்டுள்ளார்.

இந்த அமைதி நடவடிக்கையை குறித்து மேலும் அவர் கூறுகையில், வெளியுறவுச் செயலாளராக  இருந்த காலத்தில் 2015ம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட வளைகுடா பயணம் இருநாடுகளுக்கு இடையிலான நட்பை உறுதிப்படுத்தியுள்ளது என்றும், சென்ற ஆறு ஆண்டுகளில் 3 முறை மோடி பயணம் மேற்கொண்டதன் மூலம் இந்தியா-ஐக்கிய அரபு அமீரகம் இவற்றிற்கு இடையிலான நட்பு வளர்ந்து பல்வேறு நன்மை கிடைத்திருப்பதாகவும் ஜெய்சங்கர்  கூறினார்.

Categories

Tech |