Categories
தேசிய செய்திகள்

“நீட் தேர்வு” கட்டாயம் வேண்டும்… பிரதமர் மோடிக்கு 150 கடிதங்கள்…!!

நீட் மற்றும் ஜெஇஇ தேர்வுகள் குறித்த நேரத்தில் நடைபெற வேண்டுமென பிரதமர் மோடிக்கு கடிதங்கள் வந்துள்ளன.

உலகையே ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸால் ஒவ்வொரு நாடும் அல்லல்பட்டு கொண்டிருக்கிறது. இன்னிலையில் மாணவர்களுக்கு உரிய தேர்வுகள் ரத்து செய்யப்பட்டும், ஒத்திவைக்கப்பட்டும் வருகின்றது. ஆனால் நீட் மற்றும் ஜெஇஇ தேர்வுகள் குறித்து இன்னும் கேள்விக்குறியாகவே இருந்து வருகிறது. இதற்கு பல்வேறு எதிர்ப்புகள் எழுந்து வந்தாலும் மாணவர்களின் நலனைக் கருதி கல்வியாளர்கள் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளனர். இதுவரை பிரதமருக்கு 150க்கும் மேற்பட்ட கடிதங்கள் வந்து சேர்ந்துள்ளன.

கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல் என்னவென்றால் மாணவர்கள்தான் எதிர்காலத்தில் முக்கிய புள்ளிகள் அவர்களின் வாழ்க்கையோடு விளையாடுவது நியாயமல்ல. எனவே நீட் மற்றும் ஜெஇஇ தேர்வுகளை கட்டாயம் நடைமுறைப்படுத்த வேண்டும் என அவர்கள் வலியுறுத்தி இருந்தனர். மேலும் இந்த கடிதத்தில், அரசியல்வாதிகள் தங்களது செல்வாக்கை காப்பாற்றிக் கொள்வதற்காக இந்த தேர்வுகளை வைத்து விளையாடுகிறார்கள். எனவே மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு கட்டாயம் இந்த தேர்வுகளை குறித்த தேதியில் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளனர்.

Categories

Tech |