கூகுள் பிளே ஸ்டோரில் உள்ள ஆபத்தான செயலிகளை நீக்கம் செய்யாவிட்டால் பணம் திருட்டு நடைபெறுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மொபைல் செயலிகளின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருந்து வருகிறது. வீட்டில் இருந்தபடியே மொபைல் செயலிகள் மூலம் நாம் அனைத்து வேலைகளையும் செய்யும் அளவிற்கு தொழில்நுட்பம் வளர்ந்து வருகிறது. ஆனாலும் சில செயலிகள் மூலம் நம்முடைய மொபைல் போன்களுக்கோ அல்லது நமது பேங்க் அக்கவுண்டிலிருந்து பணத்தை திரட்டுவதற்கோ அதிக வாய்ப்புள்ள சில செயலிகள் நம்முடைய பிளே ஸ்டோரில் இருந்து வருகிறது. அதனை எவ்வாறு கண்டறிந்து நீக்கம் செய்யலாம் என்பது குறித்து அறிந்து கொள்வது மிகவும் அவசியம்.
இத்தகைய செயலிகளை பிளே ஸ்டோரிலிருந்து அடையாளம் கண்டறிந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். மேலும் சைபர் நிபுணர்களால் கண்டுபிடிக்கப்பட்ட ‘ஃப்ளீஸ்வேர்ட்’ செயலி மிக பயங்கரமான வைரஸ் செயலி ஆகும். இதேபோன்று 23 தேவையற்ற செயலிகள் பிளே ஸ்டோரில் இருந்து வருகின்றன. அவற்றை நீக்கம் செய்தால் நம்முடைய பணம் திருடு போகாமல் இருக்க வாய்ப்புள்ளது. அந்த 23 ஆபத்து விளைவிக்கக்கூடிய செயலிகள் என்னென்ன என்பதை காண்போம்.
com.photoconverter.fileconverter.jpegconverter
com.recoverydeleted.recoveryphoto.photobackup
com.screenrecorder.gamerecorder.screenrecording
com.photogridmixer.instagrid
com.compressvideo.videoextractor
com.smartsearch.imagessearch
com.emmcs.wallpapper
com.wallpaper.work.application
com.gametris.wallpaper.application
com.tell.shortvideo
com.csxykk.fontmoji
com.video.magician
com.el2020xstar.xstar
com.dev.palmistryastrology
com.dev.furturescope
com.fortunemirror
com.itools.prankcallfreelite
com.isocial.fakechat
com.old.me
com.myreplica.celebritylikeme.pro
com.nineteen.pokeradar
com.pokemongo.ivgocalculator
com.hy.gscanner