அமெரிக்காவின் லூசியானா மாநிலத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு லாரா என்ற புயல் தாக்கியுள்ளது.
அமெரிக்காவிலுள்ள லூசியானா மாகாணத்தின் கேம்ரான் என்ற இடத்தில் ஒரு பெரிய புயல் தாக்கியது. அந்த புயல் கரையை கடக்கும் பொழுது 150 கிலோ மீட்டர் வேகத்தில் சுழன்று அடித்தது. இதனால் கடலில் உள்ள அலைகள் உயரமாக எழுந்து சீறின. சென்ற 160 வருடங்களில் இது போல ஒரு புயல் அப்பகுதியை தாக்கியதில்லை என்று ஆய்வாளர்களால் கூறப்படுகிறது.
இந்த தீவிர புயலின் காரணமாக ஆயிரக்கணக்கானோர் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மேலும் கொரோனா பாதிக்கப்பட்டு இருப்பவர்கள் ஹோட்டல்களில் தங்க வைக்கப்பட்டனர். அது மட்டுமில்லாமல் லேக் சால்ஸ் பகுதியில் இருப்பவர்கள் வெள்ள பாதிப்பை எதிர்கொண்டுள்ளனர். முன்னெச்சரிக்கையாக டெக்சாஸ் மற்றும் லூசியானாவில் 2.70 லட்ச வீடுகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.