கொரோனா காலகட்டத்தில் ஏற்பட்டுள்ள ஜிஎஸ்டி இழப்பீட்டை இரு வாய்ப்புகள் மூலம் மாநில அரசு பெற்றுக்கொள்ளலாம் என நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
கொரோனா காலகட்டத்தில் , தங்களுக்கான ஜிஎஸ்டி இழப்பீட்டை வழங்குமாறு மாநில அரசுகள் வலியுறுத்தி வருகின்ற நிலையில், ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் இதுகுறித்து தெரிவித்த நிர்மலா சீத்தாராமன், நடப்பு நிதியாண்டில், கொரோனா காரணமாக ஜிஎஸ்டி வசூலில் 2.35 லட்சம் கோடி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக கூறினார். இந்த நிலையில், மாநில அரசுகள் தங்களது வரி வருவாய் இழப்பை ஈடு செய்ய இரண்டு வாய்ப்புகள் வழங்கப்படுவதாக அவர் தெரிவித்தார்.
அதன்படி, முதல் வாய்ப்பாக, ரிசர்வ் வங்கியுடன் கலந்தாலோசித்து 97,000 கோடி ரூபாயை நியாயமான வட்டி விகிதத்தில் வழங்க மாநிலங்களுக்கு ஒரு சிறப்பு அமைப்பு உருவாக்கப்படும். இந்தக் கடன் தொகையை செஸ் வருவாயிலிருந்து ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு மாநில அரசுகள் திருப்பிச் செலுத்தலாம். அதனை செய்ய முடியாது என்றால், இரண்டாவது வாய்ப்பாக, இந்த ஆண்டு ரூ.2.35 லட்சம் ஜி.எஸ்.டி இழப்பீட்டு வேறுபாட்டை ரிசர்வ் வங்கியுடன் கலந்தாலோசித்து மாநிலங்கள் பெற்றுக் கொள்ளலாம் என்றும் இரு வாய்ப்புகளை நிர்மலா சீதாராமன் வழங்கியுள்ளார்.