புதுச்சேரியில் 7 நாட்களுக்கு முழு ஊரடங்கு பிறப்பிக்கபட்டு, நடைமுறைப்படுத்தப்படும் என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
முழு நாடும் கொரோனா வைரசுடன் போராடி கொண்டிருக்கிறது. அதன் அடிப்படையில், நாடு முழுவதும் ஊரடங்கு போடப்பட்டு அமலில் இருந்து வருகிறது. இந்தியா முழுவதும் இதற்கான தளர்வுகள் கொடுக்கப்பட்டிருக்கும் நிலையில், வைரஸின் தீவிரம் அதிகரித்து கொண்டு தான் செல்கிறது. இதனை கட்டுப்படுத்தும் நோக்கததில் தற்போது புதுச்சேரி அரசு ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அந்த அறிவிப்பில் கொரோனா பாதிப்பு அதிகமுள்ள 32 பகுதிகளில், வருகின்ற 31ஆம் தேதி முதல் செப்டம்பர் 6ஆம் தேதி வரை ஊரடங்கு போடப்பட்டு அமல்படுத்தப்படும் என்று மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். மேலும் அங்கு சில நாட்களுக்கு தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டிருக்கும் எனவும், மக்கள் தடையை மீறி வெளியே வந்தால் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார். இதில் மருந்தகங்கள், பால் விற்பனைக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என்றும், உணவகங்கள் மதியம் 12 மணி வரை செயல்படும் எனவும் புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.