சுஷாந்த் சிங் தற்கொலை வழக்கில் புதிதாக, போதைப்பொருள் தடுப்பு பிரிவில் இருந்து 3 பேர் கொண்ட குழு இணைய உள்ளனர்.
நடிகர் சுஷாந்த் சிங் மரணத்தில் அதிக திருப்பங்கள் வந்து கொண்டிருக்கும் நிலையில், அவர் உயிர் இழந்த சம்பவத்தில் துபாயைச் சேர்ந்த போதைப் பொருள் கும்பலுக்குத் தொடர்பு இருக்கிறதா? என்ற கண்ணோட்டத்தில் விசாரிக்க டெல்லியில் இருந்து 3 பேர் கொண்ட போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் குழு நேற்றிரவு மும்பைக்கு வந்துள்ளது.
மேலும் சுஷாந்த் சிங் காதலி, நடிகை ரியா சக்ரபோர்த்தியின் மீதும் பல புகார்கள் எழுந்துள்ள நிலையில், அவரது குடும்பத்தினருடன் விசாரணை நடத்திய இக்குழுவினர், நடிகை ரியாவையும் விசாரிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஏற்கனவே சுஷாந் சிங் தற்கொலை வழக்கை சிபிஐயும், அமலாக்கத்துறையும் விசாரித்து கொண்டிருக்கும் நிலையில் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரும் இணைந்து விசாரணையை தீவிரப்படுத்த உள்ளனர் என்பது தெரிகிறது.