ரிலையன்ஸ் நிறுவனம், பொருட்களை வாங்கும் ஜியோ மார்ட் போன்ற போலி செயலி வலம் வருவதாக மக்களுக்கு எச்சரிக்கை கொடுத்துள்ளது.
இந்த ஊரடங்கு காலகட்டத்தில் பெரும்பாலும் மக்கள் வீட்டிற்கு தேவையான பொருட்களை ஆன்லைன் செயலிகள் மூலம் வாங்கி வருகின்றனர். ஆனாலும் இதில் அவ்வப்போது சில சிக்கல்களை மக்கள் எதிர்கொள்கின்ற சூழல் நிலவி வருகிறது. இந்நிலையில் ஆன்லைனில் விற்கும் ஜியோமார்ட் வணிக தளத்தின் பெயரில் போலி இணையதளங்கள் இயங்கி வருவதாகவும் வாடிக்கையாளர்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்றும் ரிலையன்ஸ் சில்லறை வர்த்தக நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக ரிலைன்ஸ் நிறுவனம் ஒரு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில்,” தற்போது வரை ஜியோ மார்ட் தரப்பில் விநியோகஸ்தர் அல்லது மாதிரி உரிமையாளர் உரிமம் போன்றவை யாருக்கும் வழங்கப்படவில்லை” என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த உரிமங்கள் நாங்கள் வழங்குகிறோம் எனக் கூறி, வாடிக்கையாளர்களிடம் இருந்து எந்த தொகையும் நாங்கள் வசூலிப்பதில்லை எனவும் ரிலையன்ஸ் நிறுவனம் குறிப்பிடப்படுள்ளது.