Categories
உலக செய்திகள்

மலைப்பாம்பிடம் இருந்து வாத்தை மீட்ட “வீர வனமகள்”… வெளியான வீடியோ பதிவு…!!

காட்டுப் பகுதியில் மலைப்பாம்புடன் சிக்கிக்கொண்ட வாத்தை ஒரு பெண் காப்பாற்றி மீட்டுள்ளார்.

கம்போடியாவின் காட்டுப் பகுதியில் பல்வேறு வனவிலங்குகள் வசித்து வரும் நிலையில் ஒரு வாத்து ஒன்று தனது குஞ்சுகளுடன் இறை தேடிக்கொண்டிருந்தது. அப்பொழுது அங்கு வந்த மலைப்பாம்பு ஒன்று வாத்தை சுற்றிவளைத்து விடாமல் பிடித்துக் கொண்டது. இதனைப் பார்த்த பெண் ஒருவர் அந்த வார்த்தை மீட்க நெடுநேரமாக அந்த மலைப்பாம்புடன் போராடினார். ஆனாலும் அதனை விரட்ட முடியவில்லை.

முயற்சியை விடாமல் தொடர்ந்து தீவிரமாக போராடி மலைப்பாம்புடன் இருந்து வாத்தை மீட்ட அந்த பெண் வாத்து தங்கியிருந்த பொந்திற்குள் மற்றொரு மலைப்பாம்பு குஞ்சு இருந்ததை பார்த்து அதனையும் காட்டுப்பகுதியை நோக்கி விரட்டிவிட்டார். காட்டுப் பகுதியில் இருக்கும் அந்த பண்ணை வீட்டில் கோழி, வாத்து, காடை போன்ற பறவையினங்களுடன் மலைப்பாம்பு, நாகப்பாம்பு ஆகியவை வளர்க்கப்படுவதாகவும் அவ்வப்போது பாம்புகள் பறவையினங்களை வேட்டையாடுவது வழக்கம் என்றும், அப்படிப்பட்ட ஒரு சூழலில் தான் அந்தப் பெண் வாத்துக்கு வாழ்வு கொடுத்த இந்த வீடியோ பதிவு படமாக்கப்பட்டது என தெரியவந்துள்ளது.

Categories

Tech |