Categories
உலக செய்திகள்

மயங்கி விழுந்த தாய்…. பொம்மை ஆம்புலன்ஸ் உதவியுடன்…. உயிரைக் காப்பாற்றிய 5 வயது மகன்….!!

பொம்மை ஆம்புலன்ஸின் உதவியுடன் தனது தாயின் உயிரை காப்பாற்றிய 5 வயது சிறுவனுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

இங்கிலாந்தை சேர்ந்த ஜோஷ் என்ற 5 வயது சிறுவனின் தாய் திடீரென மயங்கி விழுந்துள்ளார். அச்சமயம் சிறுவனும் அவனது சகோதரனும் மட்டுமே வீட்டில் இருந்துள்ளனர். உதவிக்கு பெரியவர்கள் யாரும் இல்லாத சமயம் சிறுவன் ஜோஸ் சிரிதும் தாமதிக்காமல் அவசரகால சேவை எண்ணான 112 க்கு தொடர்பு கொண்டுள்ளார். இதனை தொடர்ந்து மருத்துவக் குழு விரைந்து வந்து சிறுவனின் தாயை காப்பாற்ற முடிந்தது. இதில் குறிப்பிடத்தக்க விஷயம் ஜோஸ் அவசரகால சேவை எண்ணை தனது பொம்மை ஆம்புலன்சில் பார்த்து பிறகே உடனடியாக அந்த எண்ணிற்கு தொடர்பு கொண்டுள்ளார்.

சிறுவனின் இத்தகைய செயலை பாராட்டிய உள்ளூர் காவல்துறை கண்காணிப்பாளர் கூறியதாவது, “இது நம்ப முடியாத செயல். சிறிதும் பதட்டம் அடையாமல் சிறுவன் ஜோஸ் தைரியமாக இருந்து தனது சிந்தனைகளை ஒன்றுதிரட்டி தனது தாயை காப்பாற்றும் வழியை தேடியுள்ளார். இந்த சிறு வயதில் இந்த அளவிற்கு மன தைரியம் இருப்பது அசாதாரண விஷயம். நிச்சயம் எதிர்காலத்தில் ஒரு சிறந்த காவல் அதிகாரியாக வருவார் என்று நான் எதிர்பார்க்கிறேன்” எனக் கூறியுள்ளார். சிறுவனின் இச்செயலை சமூக வலைதளங்களில் பலரும் பாராட்டி வருகின்றனர்.

Categories

Tech |