சீனாவின் வடகிழக்குப் பகுதிகளில் பயன்படுத்தாத தீவில் உள்ள நிலங்களை வாடகைக்கு விடுவதாக சீன அரசு தெரிவித்துள்ளது.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பல்வேறு நாடுகள் பொருளாதார இழப்பு மற்றும் சுமையை பெற்று வருகிறது. அந்தவகையில் சீனா தன்னுடைய பொருளாதார இழப்பை ஈடுகட்டும் வகையில், சீனாவின் வடகிழக்கில் உள்ள லியோனிங் மாகாணம் தனக்கு சொந்தமான 100க்கும் மேற்பட்ட, மக்கள் புழக்கம் இல்லாத தீவுகளை வாடகைக்கு விட இருப்பதாக தகவல்களை வெளியிட்டுள்ளது. ஆனால் அந்த மாகாணத்தில் உள்ள 633 தீவுகளில் 44 தீவுகளில் மட்டுமே மனிதர்கள் வசித்து வருகின்றனர்.
மேலும் இந்த தீவுகளும், சுற்றியுள்ள கடல் பிரதேசங்களும் சரியாக பயன்படுத்தப்படாமல் அப்படியே இருப்பதாக புகார்கள் எழுந்துள்ளன., இந்நிலையில் மக்கள் பயன்படுத்தாத அந்த தீவில் உள்ள நிலங்களை சுற்றுலா, விவசாயம், மீன்பிடித்தல், போன்ற பல்வேறு பயன்பாட்டிற்காக வாடகைக்கு விடப்பட இருக்கின்றன. மேலும் அதிகபட்சமாக தீவில் உள்ள நிலத்திற்கு, ஒரு ஹெக்டருக்கு வருடம் ஒன்றுக்கு 26 கோடி ரூபாய் வரை வாடகை வசூலிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.