Categories
தேசிய செய்திகள்

மலைப்பாதையில் “நிலச்சரிவு”… பத்ரிநாத் நெடுஞ்சாலை மூடல்…!!

பத்ரிநாத் கோவில் செல்லும் வழியில் கனமழை காரணமாக நெடுஞ்சாலை ஓரமாக நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.

உத்தரக்கண்ட் மாநிலத்தில் அமைந்துள்ள பத்ரிநாத் கோவில் மிகவும் பிரபலமான ஒன்று. தற்பொழுது கொரோனா போரால் மூடிக்கிடந்த அந்த கோவில் சென்ற மாதம் திறக்கப்பட்டு பக்தர்கள் வந்து கொண்டிருந்த நிலையில், திடீரென்று சாமோலியில் மலைப்பாதையில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதால் பத்ரிநாத் தேசிய நெடுஞ்சாலை மூடப்பட்டுள்ளது. இந்த நிலச்சரிவு உத்தரக்கண்ட் மாநிலத்தின் சாமோலி மாவட்டத்தில் கனமழை பெய்ததால் பூர்சாதி என்னுமிடத்தில் பத்ரிநாத் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஓரிடத்தில் ஏற்பட்டது.

மலையில் இருந்து பாறைகளும் அதனுடன் மரங்களும் சாய்ந்து நெடுஞ்சாலையில் விழுந்ததால் அந்தத் தடத்தில் போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டு, அந்தப் பகுதி முழுவதும் மக்கள் கோவிலுக்கு செல்வது தடை செய்யப்பட்டுள்ளது. மேலும் அந்த நிலச்சரிவால் ஏற்பட்ட இடர்பாடுகளை நீக்கி, பாறைகளையும், மண்ணையும் அகற்றிச் சாலையைச் ஒழுங்கு செய்யும் பணியில் நெடுஞ்சாலைத் துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

Categories

Tech |