Categories
தேசிய செய்திகள்

அப்படியா?… “இத்தன நாளுக்கு அப்புறம் கொரோனா வருமா?”… ஆராய்ச்சியாளர்கள் தகவல்…!!

கொரோனா தாக்கிய ஒரு நபருக்கு ஆன்டிபயாடிக் 50 நாட்கள் வரை தான் நீடிக்கும் என ஒரு ஆய்வில் தெரியவந்துள்ளது

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பல்வேறு மருத்துவமனைகள் ஆராய்ச்சிக் கூடங்களில் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன பொதுவாக மனிதனின் உடலில் எந்த நோய் தாக்கினாலும் அதற்கு எதிர்ப்பு சக்தி தானாகவே உருவாகி விடும். தற்போது பரவிவரும் கொரோனா நோய்க்கு எதிராகவும் எதிர்ப்பு சக்திகள் மனித உடலில் உருவாகி வருகின்றன. இவ்வாறு உருவாகும் எதிர்ப்பு சக்திகள் சிலருக்கு ஆயுள் முழுவதும் நீடிக்கும். சிலருக்கு குறிப்பிட்ட ஆண்டுகளுக்குப் பிறகு காணாமல் போய் விடும். ஆனால் இந்த கொடிய கொரோனா நோய்க்கு எதிராக உருவாகி வருகின்ற யுள்ள ஆன்டிபயாடிக் 50 நாட்களிலேயே காணாமல் சென்று விடுவது கண்டு  பிடிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக மருத்துவமனைகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மொத்தம் 3 மருத்துவமனைகளில் உள்ள ஊழியர்களுக்கு இந்த ஆய்வை மேற்கொண்டு பார்த்தனர் மருத்துவர்கள். கொரோனாவால் பாதிக்கப்பட்ட மருத்துவமனை ஊழியர்கள் 801 பேரை தேர்வு செய்து ஆய்வு நடத்தப்பட்டது. அவர்களில் 28 பேருக்கு ஏற்கனவே உருவாகியிருந்த ஆன்டிபயாடிக் முற்றிலும் இல்லாமல் போயிருந்தது.மேலும் மற்றவர்களுக்கு நோய் தாக்கிய காலத்தில் 90 சதவீதம் வரை ஆன்டிபயாடிக் உருவாகியிருந்தது.

ஆனாலும் இந்த 90% பேர்களிடம் குறைவான ஆண்டிபயாடிக் தான் உருவாகியுள்ளது. இந்த ஆய்வின்படி பார்த்தால் கொரோனாவுக்கு எதிரான ஆன்டிபயாடிக் 50 நாட்களில் மறைந்துவிடும் என்று தெரியவந்துள்ளது. சிலருக்கு சில மாதங்கள் தொடர்ந்து நீடிக்கலாம். ஆன்டிபயாடிக் நீடித்தால் மட்டும் தான் மீண்டும் கொரோனா நோய் தாக்காது. ஆனால், ஆன்டிபயாடிக் இல்லாமல் போவதால் கொரோனா மீண்டும் தாக்கும் அபாயம் அதிகம் உள்ளது.

Categories

Tech |