இந்தியாவிடம் போர் விமானங்களை விற்கும் பணி 2021ம் ஆண்டுக்குள் தொடங்கும் என ரஷ்ய தொழில்நுட்ப மூத்த அதிகாரி தெரிவித்துள்ளார்.
இந்தியாவுக்கு 33 போர் விமானங்கள், 5 கேஏ 31 (ka-31) ஹெலிகாப்டர்களை விற்பனை செய்வது தொடர்பான ஒப்பந்தங்கள் இந்த வருடம் இறுதியாகிவிடும் என்று நம்புவதாக ரஷ்யா நம்பிக்கை தெரிவித்துள்ளது. மேலும் 7,418 கோடி ரூபாய்க்கு 59 மிக்-29 விமானங்களை மேம்படுத்தவும் மற்றும் 21 மிக்-29 போர் விமானங்களை வாங்கவும், 10,730 கோடி ரூபாய்க்கு 12 சுகோய் -30 எம்கேஐ (mki) விமானங்கள் வாங்கவும் சென்ற ஜூலை மாதம் இந்தியா ஒப்புதல் அளித்தது.
அதுமட்டுமில்லாமல் எஸ்-400 வான்பாதுகாப்பு அமைப்பை வாங்குவது தொடர்பாகவும் ஒப்பந்தம் செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்து கூறிய ரஷ்ய ராணுவ தொழில்நுட்ப ஒத்துழைப்பு அமைப்பின் மூத்த அதிகாரியான மரியா வோரோபயேவா எஸ்400 அமைப்புகளை இந்தியாவிடம் கொடுக்கும் பணி 2021 ஆண்டு இறுதிக்குள் தொடங்கும் என்றார்.