Categories
பல்சுவை

வரலாற்றில் இன்று ஏப்ரல் 15….!!

இன்றைய தினம் : 2019 ஏப்ரல் 15

கிரிகோரியன் ஆண்டு : 105_ஆம் நாளாகும்.

நெட்டாண்டு : 106_ஆம் நாள்

ஆண்டு முடிவிற்கு  : 260 நாட்கள் உள்ளன.

இன்றைய தின நிகழ்வுகள் :

1395 – தைமூர் தங்க நாடோடிகளின் தலைவர் தோக்தமிசை தெரெக் ஆறு சமரில் தோற்கடித்தார். தங்க நாடோடிகளின் தலைநகர் சராய் தரைமட்டமாக்கப்பட்டது.

1450 – நூறாண்டுப் போர்: பிரான்சின் போர்மிக்னி என்ற இடத்தில் ஆங்கிலேயரின் படைகளை பிரெஞ்சுப் படைகள் தோற்கடித்ததன் மூலம் வடக்கு பிரான்சில் ஆங்கிலேயரின் அதிகாரம் முடிவுக்கு வந்தது.

1632 – முப்பதாண்டுப் போர்: சுவீடன் குஸ்தாவசு அடால்பசு தலைமையில் ரைன் என்ற இடத்தில் நடந்த சமரில் புனித உரோமைப் பேரரசைத்தோற்கடித்தது.

1736 – கோர்சிக்கா இராச்சியம் அமைக்கப்பட்டது.

1755 – சாமுவேல் ஜோன்சன் என்பவர் தனது ஆங்கில அகரமுதலியை வெளியிட்டார்.

1815 – சல்லி என்றழைக்கப்பட்ட டச்சு செப்பு நாணயம் யாழ்ப்பாணத்தில் அறிமுகமானது. இது 12 பணத்திற்கு இணையானது.[1]

1817 – கேள்விக் குறைபாடுள்ளோருக்கான முதலாவது அமெரிக்கப் பாடசாலை ஹார்ட்பர்ட் நகரில் தொடங்கப்பட்டது.

1861 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: அமெரிக்காவில் கிளர்ச்சியைத் தடுப்பதற்காக 75,000 தன்னார்வலர்களைத் திரட்டுமாறு அரசுத்தலைவர் ஆபிரகாம் லிங்கன் கேட்டுக் கொண்டார்.

1865 – ஜோன் பூத் என்பவனால் முதல் நாள் சுடப்பட்ட அமெரிக்க அரசுத்தலைவர் ஆபிரகாம் லிங்கன் இறந்தார். ஆன்ட்ரூ ஜோன்சன் அமெரிக்காவின் 17வது அரசுத் தலைவரானார்.

1892 – ஜெனரல் எலக்ட்ரிக் நிறுவனம் உருவாக்கப்பட்டது.

1896 – முதலாவது ஒலிம்பிக் போட்டிகளின் இறுதி நிகழ்வுகள் ஏதென்ஸ் நகரில் இடம்பெற்றது.

1900 – பிலிப்பைன்-அமெரிக்கப் போர்: பிலிப்பீனிய ஆயுதப் போராளிகள் அமெரிக்கப் படைகள் மீது திடீர்த் தாக்குதலை ஆரம்பித்து, நான்கு நாட்கள் முற்றுகையில் வைத்திருந்தனர்.

1912 – இரண்டு மணி 40 நிமிடங்களுக்கு முன்னர் பனிமலை ஒன்றுடன் மோதிய பிரித்தானியாவின் டைட்டானிக் பயணிகள் கப்பல் வட அத்திலாந்திக் பெருங்கடலில் மூழ்கியதில் மொத்தம் 2,227 பேரில் 710 பேர் மட்டுமே உயிர் பிழைத்தனர்.

1923 – இன்சுலின் முதன் முதலாக நீரிழிவு நோய்க்கு மருந்தாகப் பாவிக்கப்பட்டது.

1936 – பாலத்தீனத்தில் அரபுக்களின் கிளர்ச்சி ஆரம்பமானது..

1940 – இரண்டாம் உலகப் போர்: நாட்சிகளினால் கைப்பற்றப்பட்டிருந்த நோர்வேயின் நார்விக் நகர் மீது கூட்டுப் படைகள் தாக்குதல் நடத்தின.

1941 – இரண்டாம் உலகப் போர்: செருமனியின் 200 போர் விமானங்கள் வட அயர்லாந்தின் பெல்பாஸ்ட் நகர் மீது குண்டுத்தாக்குதலை நடத்தியதில் ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர்.

1945 – இரண்டாம் உலகப் போர்: செருமனியில் நாட்சிகளின் பேர்கன்-பெல்சன் வதை முகாம் பிரித்தானியப் படையினரால் விடுவிக்கப்பட்டது.

1969 – வட கொரியா அமெரிக்கக் கடற்படை வானூர்தி ஒன்றை யப்பான் கடலில் சுட்டு வீழ்த்தியதில் அதில் பயணம் செய்த அனைத்து 31 பேரும் கொல்லப்பட்டனர்.

1970 – கம்போடிய உள்நாட்டுப் போரின் போது கொல்லப்பட்ட வியட்நாமிய சிறுபான்மையினத்தவரின் 800 இற்கும் அதிகமான உடல்கள் தென் வியட்நாமின் மேக்கொன் ஆற்றில் மிதந்தன.

1976 – தமிழ்நாட்டில் வள்ளுவர் கோட்டம் திறந்து வைக்கப்பட்டது.

1986 – மேற்கு பெர்லினில் ஏப்ரல் 5-இல் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் இரண்டு அமெரிக்கப் படைவீரர் இறந்ததற்குப் பழி வாங்கும் முகமாக அதிபர் ரொனால்ட் ரேகன் உத்தரவின் பேரில் ஐக்கிய அமெரிக்கா லிபியாவில் குண்டுவீச்சை நிகழ்த்தியதில் 60 பேர் கொல்லப்பட்டனர்.

1989 – இங்கிலாந்தின் இல்சுபரோ காற்பந்தாட்ட மைதானத்தில் இடம்பெற்ற நெரிசலில் சிக்கி 96 லிவர்பூல் ரசிகர்கள் இறந்தனர்.

1989 – சீனாவில் தியனன்மென் சதுக்கப் போராட்டங்கள் ஆரம்பமானது.

1997 – மக்காவில் ஹஜ் பயணிகளின் முகாம் ஒன்றில் தீப்பற்றியதில் 341 பேர் உயிரிழந்தனர்.

2002 – ஏர் சீனாவின் போயிங் விமானம் தென் கொரியாவில் வீழ்ந்ததில் 128 பேர் உயிரிழந்தனர்.

2013 – ஈராக்கில் குண்டுத்தாக்குதல்கள் நடத்தப்பட்டதில் 75 பேர் கொல்லப்பட்டனர்.

2013 – அமெரிக்காவின் மாசச்சூசெட்ஸ் மாநிலத்தில் பாஸ்டன் நகரில் பாஸ்டன் மாரத்தான் நிகழ்வில் இரண்டு குண்டுகள் வெடித்ததில் மூவர் கொல்லப்பட்டனர். 264 பேர் காயமடைந்தனர்.

2014 – தெற்கு சூடானில் மத வழிபாட்டிடங்களிலும் மருத்துவமனைகளிலும் தஞ்சமடைந்திருந்த 200 இற்கும் அதிகமான பொதுமக்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

இன்றைய தின பிறப்புகள்: 

1452 – லியொனார்டோ டா வின்சி, இத்தாலிய ஓவியர், சிற்பி, கட்டிடக் கலைஞர் (இ. 1519)

1469 – குரு நானக், 1வது சீக்கிய குரு (இ. 1539)

1563 – குரு அர்ஜன், 5வது சீக்கிய குரு (இ. 1606)

1707 – லியோனார்டு ஆய்லர், சுவிட்சர்லாந்து கணிதவியலாளர், இயற்பியலாளர் (இ. 1783)

1793 – பிரீட்ரிக் வில்கெல்ம் வான் சுத்ரூவ, செருமானிய வானியலாளர் (இ. 1864)

1858 – எமில் டேர்க்கேம், பிரான்சிய சமூகவியலாளர், மெய்யியலாளர் (இ. 1917)

1871 – சாக்கோட்டை கிருஷ்ணசாமி, இந்திய வரலாற்றாளர், திராவிடவியலாளர் (இ. 1947)

1874 – ஜொகன்னஸ் ஸ்டார்க், நோபல் பரிசு பெற்ற செருமானிய இயற்பியலாளர் (இ. 1957)

1894 – நிக்கிட்டா குருசேவ், சோவியத் ஒன்றியத்தின் 7வது பிரதமர் (இ. 1971)

1907 – நிக்கோ டின்பெர்ஜென், நோபல் பரிசு பெற்ற டச்சு-ஆங்கிலேய மருத்துவர் (இ. 1988)

1915 – கா. கோவிந்தன், தமிழக அரசியல்வாதி, எழுத்தாளர் (இ. 1991)

1920 – கிருஷ்ணா வைகுந்தவாசன், இலங்கைத் தமிழ் செயற்பாட்டாளர், அரசியல்வாதி (இ. 2005)

1924 – ம. கனகரத்தினம், இலங்கை அரசியல்வாதி (இ. 1980)

1931 – தோமசு திரான்சிட்ரோமர், நோபல் பரிசு பெற்ற சுவீடியக் கவிஞர் (இ. 2015)

1940 – ஜெஃப்ரி ஆர்ச்சர், ஆங்கிலேய எழுத்தாளர், அரசியல்வாதி

1943 – இராபர்ட்டு இலெவுக்கோவித்ஃசு, நோபல் பரிசு பெற்ற அமெரிக்க உயிரிவேதியியலாளர்

1961 – கரோல் கிரெய்டர், அமெரிக்க மூலக்கூற்று உயிரியலாளர்

1963 – மன்சூர் இலாஹி, பாக்கித்தானியத் துடுப்பாளர்

1963 – மனோஜ் பிரபாகர், இந்தியத் துடுப்பாளர்

1977 – சுதர்சன் பட்நாயக், இந்திய சிற்பி

1982 – சேத் ரோகன், கனடிய-அமெரிக்க நடிகர், இயக்குநர்

1990 – எம்மா வாட்சன், ஆங்கிலேய நடிகை

இன்றைய தின இறப்புகள் :

1704 – ஜொஹான்ஸ் வான் வாவெரேன் ஹூட், டச்சுக் கணிதவியலாளர், அரசியல்வாதி (பி. 1628)

1765 – மிகைல் இலமனோசொவ், உருசிய வேதியியலாளர், இயற்பியலாளர் (பி. 1711)

1865 – ஆபிரகாம் லிங்கன், அமெரிக்காவின் 16வது அரசுத்தலைவர் (பி. 1809)

1872 – ஒகஸ்டஸ் சீபே, செருமானிய-பிரித்தானிய பொறியியளாளர் (பி. 1788)

1888 – மேத்யு அர்னால்ட், ஆங்கிலேயக் கவிஞர் (பி. 1822)

1889 – தந்தை தமியான், பெல்ச்சிய மதகுரு, புனிதர் (பி. 1840)

1980 – இழான் பவுல் சார்த்ர, நோபல் பரிசு பெற்ற பிரான்சிய மெய்யியலாளர் (பி. 1905)

1998 – போல் போட், கம்போடியாவின் 29வது பிரதமர் (பி. 1925)

2005 – டி. எஸ். சந்தானம், தமிழகத் தொழிலதிபர்(பி. 1912)

2006 – எஸ். புண்ணியமூர்த்தி, இலங்கை வானொலி அறிவிப்பாளர்

2006 – நாவண்ணன், ஈழத்துக் கவிஞர், ஓவியர், சிற்பி

2015 – சூரிய பகதூர் தாபா, நேப்பாளத்தின் 24-வது பிரதமர் (பி. 1928)

சிறப்பு நாள்[தொகு]

பன்னாட்டுப் பண்பாட்டு நாள்

Categories

Tech |