Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

மூன்று வருடங்களுக்குப் பிறகு பிடிபட்ட கொலையாளி…அண்ணியை உயிருடன் எரித்த கொழுந்தன்…!!

 

மூன்று வருடங்களுக்கு முன்பு அண்ணியை உயிருடன் எரித்து கொலை செய்த கொழுந்தன் தற்போது காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர் .

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையை அடுத்த சடைய மங்கலத்தை சேர்ந்தவர் சுரேஷ்குமார். இவரின் மனைவி சிவகலா. இவர்கள் இருவருக்கும் இரண்டு குழந்தைகள் உள்ளனர். சுரேஷ்குமார் வெளிநாட்டில் வேலை பார்த்து வருவதால் அவரின் மனைவி மற்றும் குழந்தைகள் மட்டும் வீட்டில் தனியாக வசித்து வந்தனர். சுரேஷ்குமாரின் வீட்டிற்கு அருகில் அவர் சகோதரர் ஸ்ரீகண்டன் வீடு உள்ளது. ஸ்ரீகண்டனுக்கு திருமணமாகி மனைவி இருக்கிறார். ஸ்ரீகண்டன் வீட்டிற்கு அருகில் சிவகலா, கடந்த 2017 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 18 ஆம் தேதி உடல் முழுவதும் கருகிய நிலையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு உயிருக்கு போராடி வந்த சிவகலாவிடம் காவல்துறையினர் வாக்குமூலம் பெற்றனர். அதில் “வீட்டில் தனியாக இருந்த தன்னை கொழுந்தன் ஸ்ரீகண்டன் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி உயிருடன் கொழுத்தி விட்டதாக தெரிவித்தார்”.

அவர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் ஸ்ரீகண்டன் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வந்தனர். ஆனால் ஸ்ரீகண்டன் தலைமறைவாகிவிட்டார். இதற்கிடையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த சிவகலா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். எனவே காவல்துறையினர் இதனை  கொலை வழக்காக மாற்றி ஸ்ரீகண்டனை தேடிவந்தனர். தக்கலையில் இருந்து தலைமறைவான ஸ்ரீகண்டன் கேரளாவில் பதுங்கி இருப்பதாக காவல்துறையினருக்கு தெரியவந்தது. அவரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொண்டதில் ஸ்ரீகண்டன் கேரளாவில் கொல்லம் மாவட்டம் கோளஞ்சேரி  எனும் பகுதியில் பதுங்கி இருப்பதை கண்டுபிடித்தனர். இதைத்தொடர்ந்து தக்கலை டிஎஸ்பி ராமச்சந்திரன் உத்தரவின் அடிப்படையில் நேற்று தனிப்படை காவல்துறையினர் கொல்லம் சென்றனர். அங்கு பதுங்கியிருந்த ஸ்ரீ கண்டனை கண்டுபிடித்து கைது செய்தனர். கொலை செய்யப்பட்டு மூன்று ஆண்டுகளுக்கு பிறகு பிடிபட்ட ஸ்ரீகண்டனை காவல்துறையினர் இன்று தக்கலை அழைத்து சென்றனர். சிவகலாவை கொன்றது ஏன்? என்று அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விசாரணைக்குப் பின் அவரை காவல்துறையினர் கோர்ட்டில் ஆஜர் படுத்தவுள்ளனர்.

Categories

Tech |