ரிஷபம் ராசி அன்பர்களே…! இன்று தியாக பெரும்பான்மையுடன் செயல்படுவீர்கள்.
தொழில் உற்பத்தி, விற்பனையும் நல்லபடி இருக்கு. இஷ்ட தெய்வ அருளால் அனைத்து விஷயங்களிலும் முன்னேற்றம் இருக்கும். குடும்பத்தின் முக்கிய தேவைகளும் பூர்த்தியாகும். அரசியல் துறையில் உள்ளவர்களுக்கு பதவிகள் கிடைக்கக்கூடிய அனுகூலமாக இருக்கு. தொழில் வியாபாரம் சுமாராக நடந்தாலும் பண வரவிற்கு குறைவில்லாமல் இருக்கும். ஆர்டர்கள் கிடைத்தாலும் சரக்குகள் அனுப்புவது கொஞ்சம் தாமதமாக இருக்கும். இன்றும் உங்களுக்கு சந்திராஷ்டம் தினம் உள்ளதால் கொஞ்சம் பொறுமையாகத்தான் செயல்பட்டாக வேண்டும். கூடுமானவரை பொறுமையாக இருக்கவேண்டும். வீண் வாக்குவாதங்களில் ஏதும் செய்யாதீர்கள். பஞ்சாயத்துகளிலும் கலந்து கொள்ளாதீர்கள். வாக்குறுதிகள் எதுவும் கொடுக்காதீர்கள். வாகனத்தில் செல்லும்போதும் பொறுமையாக செல்லுங்கள். இதனை அனைத்துமே நீங்கள் கடைப்பிடித்து தான் ஆக வேண்டும். பழைய பாக்கிகளை வசூல் செய்யும் போது கொஞ்சம் கவனமாக இருங்கள். சில இடங்களில் வாக்குவாதங்கள் தோன்றும் பார்த்துக்கொள்ளுங்கள்.
உத்தியோகத்தில் இருப்பவர்கள் மிகவும் கவனமாக பணிகளை மேற்கொள்ள வேண்டியிருக்கும். பதவி உயர்வு நிலுவையில் உள்ள பணம் வருவது போன்றவை தாமதப்பட்டு தான் வந்து சேரும். பெண்களுக்கு இன்றைய நாள் சிறப்பான நாளாக இருக்கும். எவ்வித பிரச்சினையும் இருக்காது, ஆனால் சமையல் செய்யும் போது கொஞ்சம் கவனமாக இருங்கள். யாரையும் எடுத்தெறிந்து பேச வேண்டாம். எந்த ஒரு காரியத்திலும் அலட்சியம் காட்ட வேண்டாம். உங்களுடைய திறமைகள் இன்று நிரூபிக்கப்படும். இன்று காரியங்களில் தடைகள் இருந்தாலும் அனைத்து விஷயங்களும் நல்லபடியாக தான் முடியும் கவலை வேண்டாம். பணவரவு ஓரளவு சிறப்பைக் கொடுக்கும். மாலை நேரங்களில் எப்போதும் போலவே நடைப் பயிற்சி மேற்கொள்ளுங்கள். இறை வழிபாட்டுடன் காரியங்களை தொடங்குங்கள் அது போதும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது நீல நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. நீல நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சனிக்கிழமை என்பதால் எள் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னமாக கொடுங்கள் உங்கள் வாழ்க்கையில் உள்ள தோஷங்கள் நீங்கப்பெற்று செல்வச் செழிப்பை ஏற்படும்.
அதிர்ஷ்டமான திசை: வடக்கு
அதிர்ஷ்டமான எண்: 2 மற்றும் 3.
அதிர்ஷ்டமான நிறம்: நீலம் மற்றும் வெள்ளை நிறம்.