சிம்மம் ராசி அன்பர்களே…!
உங்களில் சிலர் ஏலனமாக இன்று பேசக்கூடும்.
பணியை நிறைவேற்றுவதில் கவனம் கண்டிப்பாக வேண்டும். தொழில் வியாபாரத்தில் திட்டமிட்ட இலக்கு படிப்படியாக நிறைவேறும். முக்கிய செலவுக்காக கொஞ்சம் பணம் கடன் பெறக்கூடும். உணவு உண்பதில் கட்டுப்பாடு வேண்டும். தொழில் வியாபாரம் தொடர்பான அலைச்சல் இருக்கும். வாடிக்கையாளர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. பழைய பாக்கிகளை வசூல் செய்வதில் வேகம் இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும்.
மாணவர்களுக்கு கல்வி பற்றிய கவலை விலகிச்செல்லும். விளையாட்டுப் போட்டிகளில் சாதகமான சூழ்நிலையே அமையும்.
இன்று விடுமுறை நாளில் மகிழ்ச்சியான பொழுது போக்கில் ஈடுபடுகிறார்கள். இன்று ஓரளவு நினைத்தது நடக்கும் நாளாகவே இருக்கும். இன்று காதலர்களுக்கு ஓரளவு நன்மை பெரும் நாளாகவே இருக்கும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது, வெள்ளை நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. வெள்ளை உங்களுக்கு அது அதிர்ஷ்டத்தையே கொடுக்கும் அதுமட்டுமில்லாமல் இன்று சனிக்கிழமை என்பதால் எள் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னமாக கொடுங்கள் உங்கள் வாழ்க்கையில் உள்ள தோஷங்கள் நீங்கப் பெற்று அனைத்து விஷயங்களிலும் முன்னேற்றமான சூழல் இருக்கும்.
அதிர்ஷ்டமான திசை: வடக்கு
அதிர்ஷ்டமான எண்: 1 மற்றும் 5.
அதிர்ஷ்டமான நிறம்: வெள்ளை மற்றும் நீல நிறம்.