அதிபர் டிரம்ப் அரசு எச்1பி விசா குறித்து சில விலக்கு அறிவித்து இந்திய தூதரகங்களில் விசாக்களை விண்ணப்பிக்கலாம் என தெரிவித்துள்ளது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ஏற்கனவே, அமெரிக்க நாட்டில் பயின்றுவரும் மாணவர்கள் உடனடியாக வெளியேற வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தார். அதற்காக பல போராட்டங்களும் நடைபெற்று தற்போது அதில் தீர்வு கண்டுள்ளது. மேலும் அதிபர் டிரம்ப் H1 – B விசாக்களுக்கு தடை விதித்திருந்தார். அதன்பின் அந்த விசா தடை நீக்கம் செய்யப்பட்டு சில கட்டுப்பாடுகளுடன் புழக்கத்திற்கு வந்தது. இந்த நிலையில் தற்பொழுது அதில் மேலும் ஒரு சிறிய விலக்கு ஒன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அந்த அறிவிப்பில் அமெரிக்க அதிபர் டிரம்பால் தடை விதிக்கப்பட்டுள்ள H-1B ,L-1 F, M மற்றும் J போன்ற விசாக்களை புதுப்பிக்க தேவையான விண்ணப்பங்களை இந்தியாவில் உள்ள அமெரிக்க தூதரகங்களில் உள்ள டிராப் பாக்சுகளில் சமர்ப்பித்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த விசாக்களில், ஏற்கனவே பணிபுரிந்த நிறுவனங்களில் மீண்டும் அதே வேலைக்கு செல்ல விரும்புபவர்களுக்கு தடை பொருந்தாது என சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. அதே நேரம் இந்த மாத நடுவில் இருந்து பெறப்படும் மாணவர்களுக்கான விசா விண்ணப்பங்களை கையாளுவதில் முதல் முன்னுரிமை வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.