துலாம் ராசி அன்பர்களே…!
இன்று உங்களுடைய பிரச்சினைகளை மற்றவர்களிடம் சொல்ல வேண்டாம்.
தேவையில்லாத சிரமத்திற்கு ஆளாக நேரிடும். புதிய பணிகளை பின்னொரு நாளில் செய்துகொள்ளலாம். இன்று கொஞ்சம் நிதானமாகவும் பொறுமையாகவும் இருந்தாலே போதுமானது. தொழில் வியாபார நடைமுறை தாமத கதியில் தான் இயங்கும். சேமிப்பு பணம் செலவுக்கு பயன்படும். உடல்நலத்திற்கு மருத்துவ சிகிச்சை தேவைப்படும். குடும்பத்தில் இருப்பவருடன் கோபமாக பேசுவதை தவிர்க்க வேண்டும். கணவன் மனைவிக்கு இடையில் வாக்குவாதங்கள் இல்லாமல் செல்ல வேண்டும் அதற்கு உங்களுடைய பேச்சில் கவனம் வேண்டும். அக்கம்பக்கத்தினர் உடன் சில்லரை சண்டைகள் ஏற்படக்கூடிய சூழலில் இருக்கும். அடுத்தவருடன் உரையாடும் பொழுது கவனம் இருக்கட்டும். மற்றவர்கள் உங்களைக் கோபப்படுத்தும் விதத்தில் நடந்து கொள்வார்கள். அடுத்தவர் பிரச்சினையில் தயவுசெய்து தலையிட வேண்டாம். அவர்களுக்கு எந்த ஒரு நல்லதும் செய்ய வேண்டாம். இன்று பொறுமையாக இருங்கள் அது போதும்.
தெய்வீக பக்தி கூடும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் எதைப்பற்றியும் கவலைப்படாமல் செயலாற்றுவார்கள். வேலை பார்க்கும் இடத்தில் இருந்த பிரச்சினைகள் தீரும். மேல் அதிகாரிகளுடன் இணக்கமான சூழ்நிலை நிலவும். காதலர்களுக்கு இன்றைய நாள் முன்னேற்றமான நாளாகவே இருக்கும். காதலில் வெற்றி பெறக் கூடிய சூழலும் இருக்கிறது. இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது சிவப்பு நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. சிவப்பு உங்களுக்கு அதிர்ஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சனிக்கிழமை என்பதால் எள் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னமாக கொடுங்கள் உங்கள் வாழ்க்கையில் உள்ள தோஷங்கள் நீங்கப் பெற்று செல்வ செழிப்பை ஏற்படுத்தும்.
அதிர்ஷ்டமான திசை: வடக்கு.
அதிர்ஷ்டமான எண்: 2 மற்றும் 7.
அதிர்ஷ்டமான நிறம்: சிவப்பு மற்றும் ஆரஞ்சு நிறம்.