விருச்சிகம் ராசி அன்பர்களே…!
இன்று சமயோசிதமாக செயல்படுவீர்கள்.
முக்கியமான பணியில் சிறப்பான முன்னேற்றம் இருக்கும். தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி திருப்திகரமாக இருக்கும். உபரிப்பணம் கிடைக்கும். உறவினர் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி இருக்கும். முயற்சிகள் வெற்றியை கொடுக்கும். எதனையும் ஆராய்ந்து முடிவுகளை எடுப்பது ரொம்ப நல்லது. பெரியோர்களிடம் பகைமை பாராட்டுவதை தவிர்க்க வேண்டும். தொழில் வியாபாரம் நிதானமாகத்தான் நடக்கும். கடன் விவகாரங்கள் கட்டுக்குள் இருக்கும். புதிய ஆடர்களுக்கான முயற்சிகள் சாதகமான பலனையே கொடுக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் வீண் அலைச்சலை கொஞ்சம் சந்திக்க வேண்டியிருக்கும். அலுவலக பணியில் மூலம் டென்ஷன் அதிகரிக்கும். கோபம் இல்லாத பேச்சை கண்டிப்பாக பேசவேண்டும். எல்லோரிடத்திலும் கவனமாகவே நடந்து கொள்ளுங்கள். அதேபோல் வெளியூர் பயணத்தில் கொஞ்சம் கவனம் இருக்கட்டும். உடமைகள் மீது கவனம் என்பது கண்டிப்பாக வேண்டும். மாலைப் பொழுதில் நல்ல செய்திகள் உங்களுக்கு காத்திருக்கும். மனம் குளிரும். காதலர்களுக்கும் இன்றைய நாள் சிறப்பான நாளாக இருக்கும். பிரச்சினைகள் ஏதுமில்லை.
இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது வெள்ளை நிறம் உங்களுக்கு அது அதிர்ஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சனிக்கிழமை என்பதால் எள் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னமாக கொடுங்கள் உங்கள் வாழ்க்கையில் உள்ள தோஷங்கள் நீங்கி செல்வ செழிப்பை ஏற்படுத்தும்.
அதிர்ஷ்டமான திசை: வடக்கு
அதிர்ஷ்டமான எண்: 5 மற்றும் 7
அதிர்ஷ்டமான நிறம்: வெள்ளை மற்றும் வெளிர் நீல நிறம்.