கேரள முதல்வர் பினராயி விஜயன் பதவி விலக வேண்டும் என காங்கிரஸ் கட்சியின் இளைஞரணி போராட்டத்தில் ஈடுபட்டது.
உலகம் முழுவதும் அச்சுறுத்தி வரும் கொரோனா, தேர்தல் விவகாரம், வெள்ள பாதிப்பு, கனமழை, நிலச்சரிவு, காட்டுத்தீ என பல்வேறு சிக்கல்களில் நாட்கள் நகர்ந்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில் ஒருபக்கம் தங்க கடத்தல், பணமோசடி இவைகளும் தொடர்ந்து அரங்கேறி வருகின்றது. அந்த வகையில் தற்போது வெளிநாட்டில் இருந்து விமானத்தில் தங்கம் கடத்திய வழக்கு தொடர்பாகக் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன்க்கு சம்பந்தம் இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டு வந்தது.
அவர் மீது எழுந்த குற்றச்சாட்டை கருத்தில்கொண்டு, அவர் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி வயநாட்டில் காங்கிரஸ் கட்சியினுடைய இளைஞரணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். காவல்துறையினர் தடுத்தும் அவர்கள் நிற்காமல் போராடி வந்தனர். அப்போது பாதுகாப்புக்கு நின்ற காவல்துறையினருடன் அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், காவலர்கள் திடீரெனத் தடியடி நடத்தி காங்கிரஸ் கட்சியினுடைய இளைஞரணிகளை விரட்டியடித்து வெளியேற்றினார்கள்.