தீ பிடித்து எறிந்த வீட்டில் இருந்து ஜன்னல் வழியாக குடும்பமே தப்பித்த காணொளி வெளியாகியுள்ளது
சீனாவில் இருக்கும் 3 மாடி கட்டிடம் ஒன்றில் அமைந்திருந்த வீட்டில் திடீரென தீ பிடித்துள்ளது. இதனால் அங்கு வசித்து வந்த குடும்பம் படிக்கட்டின் வழியாக தப்ப முடியாத சூழல் உருவாகியுள்ளது. இதன் காரணமாக வீட்டில் இருந்தவர்கள் ஜன்னல்வழியாக தப்பித்த காணொளி தற்போது சமூக வலைதளத்தில் வெளியாகியுள்ளது. குறித்த காணொளியில் தீப்பற்றி எரிந்த வீட்டின் ஜன்னல்வழியாக தாய் ஒருவர் தனது ஐந்து வயது மகனை கீழே தூக்கிப் போட அச்சிறுவனை கீழே நின்று இருந்தவர்கள் போர்வையின் உதவியோடு எந்த காயமும் இன்றி மீட்டனர்.
அதேபோன்று அச்சிறுவனின் தங்கையையும் தாய் கீழே தூக்கிப் போட அதே போன்று எந்த ஒரு காயமும் இன்றி சிறுமியும் மீட்கப்பட்டாள். இறுதியாக அந்தத்தாய் கட்டிடத்தில் அமைக்கப்பட்டிருந்த குழாய்களை பிடித்துக்கொண்டு இரண்டாவது மாடி வரை வந்து பின்னர் கீழே குதித்தார். குழந்தைகள் இருவரும் எந்த ஒரு காயமும் இன்றி பத்திரமாக மீட்கப்பட்டு விட தாய்க்கு மட்டும் லேசான காயங்கள் ஏற்பட்டுள்ளது. இதனிடையே தீயணைப்பு வீரர்களும் வந்துவிட சிறிது நேர போராட்டத்திற்கு பிறகு வீட்டில் பிடித்த தீயை அணைத்தனர்.