Categories
தேசிய செய்திகள்

மருத்துவ துறையில் மட்டும்… 87,000 பேருக்கு கொரோனா…!!

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸால் மருத்துவத் துறையில் மட்டும் 87 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நாடு முழுவதும் பரவிக் கிடக்கும் கொரோனா வைரஸ் மக்களை மட்டுமல்லாமல் முக்கிய தலைவர்கள், அரசியல் பிரதிநிதிகள், மருத்துவர்கள், செவிலியர்கள் என பல்வேறு தரப்பினரை பாதித்து வருகிறது. இந்தியா மட்டுமில்லாமல் நாடு முழுவதும் இந்த பாதிப்பு தொடர்ந்து வருகிறது. அந்த வகையில் நாடு முழுவதும் 6 மாநிலங்களில் மருத்துவத்துறையில் மட்டும் 87 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இதில் பலியானவர்களின் எண்ணிக்கை 573 ஆக உள்ளது.

குறிப்பாக இந்தியாவில், தமிழ்நாடு, மகாராஷ்டிரா, கர்நாடகா, மேற்குவங்கம், குஜராத் மற்றும் டெல்லி இந்த மாநிலங்கள் தான் அதிகமாக பாதிப்பை பெற்றுள்ள நாடுகளாக உள்ளது. அது மட்டுமில்லாமல் மகாராஷ்டிரா, கர்நாடகா, தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் ஒரு லட்சம் மருத்துவ பணியாளர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் தமிழ்நாட்டில் மட்டும் 11 ஆயிரத்துக்கும் மேலான மருத்துவ பணியாளர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Categories

Tech |