கொரோனா பரவலை தடுக்க பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு இம்மாதம் 31ஆம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில் அது குறித்து முதலமைச்சர் இன்று முக்கிய ஆலோசனை நடத்த உள்ளார்.
கொரோனா ஊரடங்கு நாடு முழுவதும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ள நிலையில் அதனை தடுக்கும் பொருட்டு பொது ஊரடங்கை மத்திய அரசு அறிவித்தது. பல்வேறு கட்டங்களாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில், இம்மாதம் 31ஆம் தேதியுடன் பொது ஊரடங்கு காலம் நிறைவடையவுள்ள நிலையில் அதுகுறித்து முதலமைச்சர் திரு. எடப்பாடி பழனிச்சாமி இன்று இரண்டு கட்டங்களாக ஆலோசனை நடத்த உள்ளார்.
காலை மாவட்ட ஆட்சியர்களுடனும், மாலை மருத்துவ நிபுணர்களுடனும் ஆலோசனை நடத்தவுள்ளார். இந்த ஆலோசனைக்குப் பின்னர் புதிய தளர்வுகள் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேவேளையில் ஞாயிறு தோறும் கடைபிடிக்கப்படும் ஊரடங்கும் நீக்கப்படுமா என்பது தெரியவரும்.