Categories
உலக செய்திகள்

வர்த்தக ரகசியங்கள் “திருட்டு”… சீனா ஆராய்ச்சியாளர் கைது…!!

சீன ஆராய்ச்சியாளரான ஹைஜோ ஹூ அமெரிக்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் அடிக்கடி மோதல் ஏற்பட்டு அவர்களுக்கு இடையேயான உறவு வலுவிழந்து போகிறது. இதற்கு காரணம் சீனா சட்டத்திற்கு விரோதமாக உளவு வேலை பார்த்ததாக குற்றச்சாட்டு எழுந்து, டெக்சாஸ் மாநிலம் ஹூஸ்டனில் உள்ள சீன துணைத் தூதரகத்தை  அமெரிக்கா மூட உத்தரவிட்டது. சீனா இதற்கு பழிக்குப்பழி வாங்கும்  நோக்கத்தில் செங்டுவில் உள்ள அமெரிக்க துணைத் தூதரகத்தை மூட உத்தரவிட்டது. இவ்வாறு இரு நாடுகளுக்கும் இடையே தொடர்ந்து மோதல்கள் உருவாகி வருகின்றன.

அந்த வகையில் தற்போது சீன ஆராய்ச்சியாளரான 34 வயது உள்ள ஹைஜோ ஹூ அனுமதி இல்லாமல் பாதுகாத்து வைத்திருந்த  கம்ப்யூட்டர்களை இயக்கியதாகவும், அதிலிருந்து வர்த்தக ரகசியங்களை திருடியதாகவும், குற்றம்சாட்டி அமெரிக்க அதிகாரிகள் ஹைஜோ ஹூ வை கைது செய்தனர். மேலும் இவர் சீனா செல்ல முயன்ற பொழுது கிரிமினல் வழக்கில் கைது செய்யப்பட்டிருப்பதாக அமெரிக்க நீதித்துறை தெரிவித்துள்ளது.

Categories

Tech |