Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஐபிஎல் தொடரில் இருந்து விலகி நாடு திரும்பிய ரெய்னா…. காரணம் குறித்து சிஇஓ அறிவிப்பு …!


சிஎஸ்கே அணியின் துணை கேப்டனனான சுரேஷ் ரெய்னா ஐபிஎல் தொடரில் இருந்து விலகி நாடு திரும்பியதாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சிஇஓ அறிவித்துள்ளார்.

இந்த ஆண்டிற்கான ஐபிஎல் தொடர் கொரோனா அச்சுறுத்தலின் காரணமாக ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற உள்ளது. இதில் பங்குபெறும் அணியின் வீரர்கள் துபாய் சென்றுள்ளனர். அவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். ஐபிஎல் தொடர் வருகின்ற 19ஆம் தேதி துவங்க உள்ள நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் துணை கேப்டன் சுரேஷ் ரெய்னா ஐபிஎல் தொடரில் இருந்து விலகி சென்றுள்ளார். இதுகுறித்து அணியின் சிஇஓ விஸ்வநாதன் “ரெய்னா சொந்த காரணங்களுக்காக இந்தியா திரும்பி இருப்பதாக தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தனிப்பட்ட காரணங்களுக்காக இந்தியா திரும்பி இருப்பதால் ஐபிஎல் தொடரில் விளையாட மாட்டார் எனவும், இந்த நேரத்தில் அவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் முழு ஆதரவையும் வழங்கும்” என்று டுவிட்டர் பக்கத்தில் அவர் தெரிவித்துள்ளார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை சேர்ந்த ஒரு வீரர் உட்பட மொத்தம் 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், முன்னணி பேட்ஸ்மேனாக திகழும் சுரேஷ் ரெய்னா ஐபிஎல் தொடரை விட்டு விலகியிருப்பது அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

 

Categories

Tech |