“விவேகானந்தரின் விஜயமே வருக” என விஜய் ரசிகர்கள் போஸ்டர் ஒட்டியுள்ளதால் மீண்டும் சர்ச்சை எழுந்துள்ளது.
நடிகர் விஜயின் ரசிகர்கள் கடந்த வாரம் மக்கள் இயக்கத்தின் புரட்சித்தலைவி என விஜய் மனைவி சங்கீதாவை ஜெயலலிதா போலவும், மக்கள் இயக்கத்தின் புரட்சித்தலைவர் என விஜய்யை எம்ஜிஆர் போலவும் சித்தரித்து போஸ்டர் ஒட்டினர்.. இந்த போஸ்டர் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனைத் தொடர்ந்து தற்போது விவேகானந்தரின் அவதாரமாக போஸ்டர் ஒட்டியுள்ளனர்.. இந்த போஸ்டரில் விவேகானந்தரின் விஜயமே வருக… நல்லாட்சி தருக! என அரசியல் வாசகம் பேசும் இந்த போஸ்டரால் மீண்டும் சர்ச்சை எழுந்துள்ளது.. மதுரை புறநகர் வடக்கு மாவட்ட தொண்டரணி தலைமை தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பில் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது..