தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மருத்துவ குழுவினரோடு ஆலோசனை மேற்கொண்டு வருகின்றார்.
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் 25ஆம் தேதி முதல் முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா கட்டுக்குள் வராத நிலையில் மக்களின் வாழ்வாதாரம், பொருளாதாரம் போன்றவற்றை கருத்தில் கொண்டு ஜூன் மாதம் 1ஆம் தேதி முதல் படிப்படியாக மத்திய அரசால் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இதையே மாநில அரசும் பின்பற்றுகிறது.
தற்போதைய சூழ்நிலையில் நாடு முழுவதும் மூன்றாம் கட்ட ஊரடங்கு தளர்வு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது நாளை மறுநாளோடு ( 31ஆம் தேதி ) முடிவடைய இருக்கிறது. செப்டம்பர் ஒன்றாம் தேதியிலிருந்து ஊரடங்கு நான்காம் கட்ட தளர்வுகள் கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன. பொதுமுடக்கம் தொடங்கி இன்றோடு 158 நாட்கள் ஆகியுள்ளதால் மக்கள் அதிக தளர்வுகளை எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.
அந்த வகையில் இன்று தமிழக முதல்வர் மாவட்ட ஆட்சியருடன் காணொளியில் கலந்து ஆலோசித்தார். மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள கொரோனா பாதிப்பு குறித்து கேட்டறிந்த முதல்வர், பல்வேறு உத்தரவுகளையும் பிறப்பித்தார். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை கூட்டம் தற்போது நிறைவடைந்ததைத் தொடர்ந்து தற்போது மருத்துவ நிபுணர் குழு ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். இதில் தமிழகத்தில் மேலும் நீட்டிக்க வாய்ப்பிருப்பதாக சொல்லப்படுகிறது.