2019 உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணி தேர்வு இன்று மும்பையில் நடைபெறுகிறது.
2019 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி வருகின்ற மே மாதம் 30-ம் தேதி முதல் தொடங்கி ஜூலை 14-ம் தேதி வரை இங்கிலாந்தில் நடக்கிறது. இந்த போட்டியில் நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலியா இந்தியா, தென்ஆப்பிரிக்கா, போட்டியை நடத்தும் இங்கிலாந்து, நியூசிலாந்து, பாகிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ், இலங்கை வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய 10 நாடுகள் பங்கேற்கின்றன.
உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான வீரர்களை தேர்வு செய்வதற்கு ஐ.சி.சி ஏப்ரல் 23 ம் தேதி வரை காலக்கெடு கொடுத்திருந்தது. ஏற்கனவே நியூசிலாந்து அணி வீரர்களை தேர்வு செய்து விட்டது. இந்நிலையில் இந்திய அணி 15 வீரர்களாக யாரை தேர்வு செய்யப்போகிறாரகள் என்று மிகுந்த எதிர்பார்ப்பாக உள்ள நிலையில் இந்திய அணி வருகிற 15-ந்தேதி மும்பையில் அறிவிக்கப்பட இருப்பதாக தெரிவித்தது.
இந்நிலையில் மும்பையில் இன்று பிற்பகல் இந்திய கிரிக்கெட் வாரிய தேர்வு குழு கூட்டம் நடைபெறுகிறது. எம்எஸ்கே .பிரசாத் தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் தேர்வாளர்கள் கூடி ஆலோசித்து வீரர்களை தேர்வு செய்ய உள்ளனர். இக்கூட்டத்தில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி ஆகியோரும் கலந்து கொள்கின்றனர். சமீபத்தில் நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக நடந்த ஆட்டத்தில் இந்திய அணியில் இடம் பிடித்த வீரர்களே உலக கோப்பையில் தொடர்வார்கள் என பெரும்பாலும் எதிர்பார்க்கப்படுகிறது. ஒரு சில இடத்துக்கு மட்டுமே புதிய வீரர்கள் தேர்வு செய்யபடலாம்.