நாளைய பஞ்சாங்கம்
30-08-2020, ஆவணி 14, ஞாயிற்றுக்கிழமை, துவாதசி திதி காலை 08.22 வரை பின்பு வளர்பிறை திரியோதசி.
உத்திராடம் நட்சத்திரம் பகல் 01.52 வரை பின்பு திருவோணம்.
நாள் முழுவதும் அமிர்தயோகம்.
நேத்திரம் – 2.
ஜீவன் – 1. பிரதோஷ விரதம்.
ஹயக்ரீவர்- சிவ வழிபாடு நல்லது.
சுபமுகூர்த்த நாள்.
சகல சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள்.
இராகு காலம் – மாலை 04.30 – 06.00,
எம கண்டம் – பகல் 12.00 – 01.30,
குளிகன் – பிற்பகல் 03.00 – 04.30,
சுப ஹோரைகள் – காலை 7.00 – 9.00, பகல் 11.00 – 12.00 , மதியம் 02.00 – 04.00, மாலை 06.00 – 07.00, இரவு 09.00 – 11.00,
நாளைய ராசிப்பலன் – 30.08.2020
மேஷம்
உங்களின் ராசிக்கு உடலில் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். குழந்தைகள் மூலம் மகிழ்ச்சியான செய்தி வரும். வீட்டில் இருந்தவர்களிடம் இருந்து பிரச்சினைகள் அகலும். உடன் பிறந்தவர்களிடம் ஆதரவும் உதவியும் கிட்டும். உத்தியோகத்தில் லாபம் கிடைக்கும். வெளியூர்களில் இருந்து நல்ல தகவல் வந்து சேரும்.
ரிஷபம்
இந்த ராசிக்குவீட்டில் பிரச்சனைகளால் மன நிம்மதி கெடும். குழந்தைகளிடம் கருத்துவேறுபாடு தேவையில்லாமல் ஏற்படும். சிறுது விட்டுக்கொடுத்து செல்லுங்கள். வீட்டுத் தேவைகளைப் பெண்கள் பூர்த்தி செய்வார்கள். தொழிலில் கொடுக்கல்-வாங்கல் மனநிம்மதியை தரும். வருமானம் பெருக வாய்ப்பு.
மிதுனம்
உங்களின் ராசிக்கு மனக்குழப்பம் ஏற்படலாம். உங்களின் ராசியில் சந்திராஷ்டமம் இருப்பதினால் நிதானத்துடன் செயல்படுங்கள். சுப முயற்சிகளை கொஞ்சநாள் தள்ளி வையுங்கள். தேவையற்ற அவர்களிடம் பேசுவதை தவிருங்கள். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
கடகம்
உங்களின் ராசிக்கு சுப செய்திகள் வருவதனால் மகிழ்ச்சி அடைவீர். வீட்டில் கருத்து வேறுபாடுகள் அகலும். புதிய முயற்சிகளில் நல்ல பலன் கிடைக்கும். ஆடைகள் ஆபரணங்கள் வாங்குவதில் கவனம் ஏற்படும். பூர்வீக சொத்துக்களில் இருந்து அனுகூலம் உண்டாகக்கூடும்.
சிம்மம்
உங்கள் இராசிக்கு பிரச்சினைகளை அகன்று சந்தோஷம் பெருகும். பெரியோர்களால் மதிக்கப்படுவீர்கள். புதிய வாகனம் கிடைக்க வாய்ப்பு. சுபகாரிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். உத்தியோகத்தில் சிறு சிறு மாற்றங்கள் ஏற்படுவதினால் எதிர்பார்த்த லாபம் கிட்டும்.
கன்னி
உங்களின் ராசிக்கு குடும்பத்தில் மகிழ்ச்சி குறைய வாய்ப்பு உண்டு. சுபமுகூர்த்த காரியங்களில் தடை ஏற்படும். குழந்தைகள் உங்களுடைய குணத்துக்கு ஏற்ப நடந்து கொள்வார்கள். உடன் இருப்பவர் களிடம் அனுசரித்து செல்லவும் தேவையற்ற பிரச்சனை வரக்கூடும்.
துலாம்
உங்களின் ராசிக்கு குழந்தைகளின் தேவைக்கு சிறுதொகை செலவழிப்பீர்கள். உறவினர்களுடன் மனக்கசப்பு ஏற்படக்கூடும். சிக்கனமாக செயல்படுவது நல்லது. கடவுள் வழிபாடு மனதில் சந்தோஷத்தை கொடுக்கும். உடன் இருப்பவர்களுடன் அனுசரித்து செல்லவும்.
விருச்சிகம்
உங்களின் ராசிக்கு தேவையற்ற பண செலவு உண்டாகும். உறவினர்கள் மூலம் நல்ல செய்திகள் வந்துசேரும். உடல்நிலை சீராக இருக்கும். உத்தியோகத்தில் பிரச்சினைகளும் முன்னேற்றம் காண்பீர். கடன்கள் அகலும். புதிய பொருட்களை வாங்க விரும்புவீர். மகிழ்ச்சி உண்டாகும்.
தனுசு
உங்களின் ராசிக்கு பணவரவு தாராளமாக இருக்கும் செலவும் அதிகரிக்கும். உறவினர்களால் செலவுகள் கூடும். நண்பர்களை சந்திப்பதில் ஆர்வம் கூடும். உத்தியோகத்தில் வளர்ச்சிக்காக எடுக்கும் முயற்சி பலன் தரும்.
மகரம்
உங்களின் ராசிக்கு பண வரவு சிறப்பாக இருக்கும். வீட்டில் செலவு கட்டுக்கடங்கி இருக்கும். உடல்நிலையில் நல்ல நிலை இருக்கும். சுபகாரிய நிகழ்ச்சி யில் நல்ல பலன் கிடைக்கும். ஆடம்பரப் பொருட்களை வாங்க ஆர்வம் காட்டுவீர்கள். பழைய கடன்கள் அனைத்தும் வசூலாகும்.
கும்பம்
உங்களின் ராசிக்கு வீட்டில் தேவையில்லாத பிரச்சினைகளால் மனக்கசப்பு வரக்கூடும். குழந்தைகளின் வழியில் வீண் செலவு ஏற்படும். சுபகாரிய விஷயங்களில் நல்ல செய்தி கிடைக்கும். வீட்டில் இருப்பவர்கள் ஆதரவுடன் இருப்பார். எதிர்பார்த்த உதவிகள் அனைத்தும் கிடைக்கும்.
மீனம்
உங்களின் ராசிக்கு குழந்தைகள் வழியில் சந்தோஷமான நிகழ்ச்சி ஏற்படக்கூடும். சிவ செலவுகள் ஏற்பட நேரலாம். பெரிய மனிதர்களிடம் இருந்து நட்பு உருவாகும். உத்தியோகத்தில் நல்ல முன்னேற்றம் காண்பீர். உற்றார் உறவினர்கள் உதவியாக இருக்க நேரும்.