Categories
தேசிய செய்திகள்

“விஜய் மல்லையா” வழக்கில் புதிய திருப்புமுனை… என்ன தெரியுமா?…!

கடன் உதவியாக வங்கிகளிடமிருந்து பெற்ற தொகையை திருப்பி கொடுப்பதாக விஜய் மல்லையா தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் மிகப்பெரிய தொழில் அதிபராக இருந்தவர் விஜய் மல்லையா இவர் 2016ஆம் ஆண்டு பணம் மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் தலைமறைவாக இருந்தார். இந்நிலையில் இந்த வழக்கில் தற்போது ஒரு திருப்புமுனை ஏற்பட்டுள்ளது. இவர் ஏற்கனவே இந்திய வங்கிகளிடம் கடன் தொகையாக 14,518 கோடி ரூபாயை வாங்கியிருந்தார். ஆனால் அதைத் திருப்பிக் கொடுக்கவில்லை.

யார் இந்த மல்லையா? கிங் பிசர் நிறுவனம் வாங்கிய கடனை திருப்பி கொடுக்க முடியாமல் அதன் உரிமையாளர் மல்லையா லண்டனுக்கு 2016இல் தப்பிச் சென்று தலைமறைவானார். அந்த கடனுக்காக விஜய் மல்லையாவின் யுனைடெட் ப்ருவெரிஸ் நிறுவனத்தை முடக்க கர்நாடக உயர்நீதிமன்றம் மார்ச் மாதம் உத்தரவு பிறப்பித்திருந்தது. ஆனால் கிங்பிஷர் நிறுவனம் இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், 14,518 கோடி ரூபாயை திருப்பி கொடுக்க நாங்கள் தயாராக இருப்பதாக கூறியுள்ளதாக கருதப்படுகிறது.

Categories

Tech |