ஐபிஎஸ் அதிகாரியாக இருந்து ஓய்வு பெற்ற அண்ணாமலை பாஜக கட்சியின் துணைத்தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஐ.பி.எஸ். அதிகாரி அண்ணாமலை, சென்ற மே மாதம் தனது பணியைத் துறந்து ஓய்வு அறிவித்தார். தான் செய்த பணிக்கு பின் பொதுவாழ்வில் ஈடுபடுவதாகத் கூறியிருந்த அண்ணாமலை, சமீபத்தில் டெல்லியில் பாஜக தேசிய பொதுச் செயலாளர் முரளிதர் ராவ், தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் போன்றோர் முன்னிலையில், அக்கட்சியில் இணைந்துள்ளார்.
பாஜக கட்சியில் சேர்ந்த அண்ணாமலை எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல், கட்சித் தலைமைக்கு கட்டுப்பட்டு கட்சியில் பணியாற்ற இருப்பதாக கட்சியில் இணையும் பொழுது அவர் தெரிவித்தார். இந்நிலையில் தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநில துணைத்தலைவராக அண்ணாமலை நியமிக்கப்பட்டு பொறுப்பேற்றுக் கொண்டதாக மாநில தலைவர் எல்.முருகன் அறிவித்துள்ளார்.