தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 6,352 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது மக்களை அதிர்ச்சி அடையவைத்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் புதிய உச்சம் பெற்று கொண்டு வருகிறது. தினமும் மாலை 6 மணிக்கு கொரோனா குறித்த விவரங்களை தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் இன்றும் கொரோனா பாதிப்பு குறித்த விவரங்கள் வெளியாகியது. இது மக்களுக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. குறிப்பாக தமிழகத்தில் 30 நாட்களுக்குப் பிறகு இப்படி ஒரு உச்சத்தை கொரோனா பெற்றுள்ளது, மக்களை நடுங்க வைத்துள்ளது.
இன்று ஒரே நாளில் 6,352 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு 30 நாட்களுக்கு பிறகு 6 ஆயிரம் என்ற உச்சத்தை எட்டியுள்ளது. இதனால் மொத்த மதிப்பு 4 லட்சத்து 15 ஆயிரத்து 590 ஆக அதிகரித்துள்ளது. இன்று ஒரே நாளில் 87 பேர் உயிரிழந்ததாக இறப்பு எண்ணிக்கை 7130 ஆக உயர்ந்திருப்பது மக்களை நடுநடுங்க செய்துள்ளது.