மிதுனம் ராசி அன்பர்களே…!
இன்று எந்த ஒரு கஷ்டத்தையும் தாங்கக்கூடிய சகிப்புத்தன்மை கொண்ட உங்களின் ராசிக்கு அனுகூலமற்ற அமைப்பு என்பதால் எதிலும் சற்று நிதானத்துடன் இருப்பது நல்லது.
கணவன் மனைவி ஒருவரை ஒருவர் விட்டுக் கொடுத்து நடந்து கொள்வதும், குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்து நடந்து கொள்வதும், பேச்சில் நிதானத்தை கடைப்பிடிப்பதும் நல்ல பலன்களைக் கொடுக்கும். உடல் ஆரோக்கியமும் அவ்வளவு சிறப்பாக இருக்காது. அன்றாட பணிகளை செய்து முடிப்பதில் மந்தநிலை உண்டாகும். இன்று அலைச்சல் மற்றும் டென்ஷன்களை சந்திக்க நேரிடும். ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது.
அதிர்ஷ்டமான திசை: தெற்கு.
அதிர்ஷ்டமான எண்: 5.
அதிர்ஷ்டமான நிறம்: சிவப்பு நிறம்.