கன்னி ராசி அன்பர்களே…!
இன்று உங்களின் ராசிக்கு உற்றார் உறவினர்களின் ஆதரவு மகிழ்ச்சியளிக்கும் என்றாலும் பேச்சில் மட்டும் சற்று கவனமுடன் செயல்படுவது நல்லது.
கொடுக்கல்-வாங்கலில் கடந்த காலங்களில் இருந்த பிரச்சினைகள் இப்பொழுது விலகும். கொடுத்த கடன்களும் வீடு தேடி வரும். விரோதிகளும் நண்பர்கள் ஆவார்கள். பணிபுரிபவர்களுக்கு தகுதிக்கு ஏற்ற உயர்வுகள் கிடைக்கும். உங்கள் திறமைகள் உயர் அதிகாரிகளால் பாராட்டப்படும். தொழில் மற்றும் வியாபாரத்தில் சிறப்பான முன்னேற்றம் உண்டாகும். தொழிலாளர்களும் சாதகமாகச் செயல்படுவதால் முன்னேற்றத்தை பெறுக்க முடியும். மாணவ மாணவியர்களுக்கு அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் கிடைக்கும். கன்னி ராசி நேயர்கள் அம்மன் வழிபாடு மேற்கொள்வது மிகவும் நல்லது.
அதிர்ஷ்டமான திசை: வடக்கு.
அதிர்ஷ்டமான எண்: 2.
அதிர்ஷ்டமான நிறம்: கரும்பச்சை.