துலாம் ராசி அன்பர்களே…!
இன்று தன்னை நம்பியவர்களுக்கு நல்லெண்ணத்துடன் உதவிகள் செய்தாலும், அடிக்கடி ஏமாற்றங்களை சந்திக்கும் உங்களின் ராசிக்கு வலமான பலன்களை தரக்கூடிய நல்ல அமைப்பாகும்.
எல்லா வகையிலும் நல்ல பலன்கள் உங்களை தேடி வரும். பொருளாதார நிலை சிறப்பாக அமைந்து, குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். கணவன் மனைவிக்கு இடையே ஒற்றுமை குறைய கூடிய சம்பவங்கள் இன்று நடைபெறலாம்.எனவே பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது மிகவும் நல்லது. உடல் ஆரோக்கியத்தில் சற்று அக்கறை செலுத்தினால் தேவையற்ற மருத்துவ செலவுகளை தவிர்க்கலாம். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தாமத பலன் உண்டாகும்.
அதிர்ஷ்டமான திசை: தெற்கு.
அதிர்ஷ்டமான எண்: 6
அதிர்ஷ்டமான நிறம்: நீல நிறம்.