Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

9 – 12 ஆம் வகுப்பு மாணவர்கள் பெற்றோர் அனுமதியுடன் பள்ளிக்கு வரலாம் – மத்திய அரசு..!!

4ஆம் கட்ட பொது முடக்க தளர்வுகளில் செப்டம்பர் 21 ஆம் தேதிக்கு பிறகு 9 – 12 ஆம் வகுப்பு மாணவர்கள் பெற்றோர் அனுமதியுடன் பள்ளிக்கு வரலாம் என மத்திய அரசு அறிவித்திருக்கிறது.

கொரோனா வைரஸ் பாதிப்பின் காரணமாக கடந்த மார்ச் மாதம் நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து ஜூலை 1ஆம் தேதி முதல் தளர்வுகளுடன்  ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட நிலையில், 3ஆம் கட்ட ஊரடங்கு தளர்வு வருகின்ற 31ம் தேதியுடன் முடிவடைய இருக்கிறது. இந்த நிலையில் தற்போது மத்திய அரசு 4ஆம் கட்ட தளர்வுகள் குறித்து அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அதில், செப்டம்பர் 30ஆம் தேதிவரை பொதுமுடக்கம் சில தளர்வுகளுடன் அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.. நான்காம் கட்ட பொது முடக்க தளர்வுகளில் செப்டம்பர் 7-ஆம் தேதி முதல் நாடு முழுவதும் மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்படும். செப்டம்பர் 21 முதல் விளையாட்டு, பொழுதுபோக்கு, கலாச்சார அரசியல் நிகழ்வுகள் 100 பேருடன் நடத்தலாம்.

செப்டம்பர் 21 முதல் திறந்தவெளி கலையரங்கம், திரையரங்குகள் செயல்படும்.  செப்டம்பர் 30 வரை பள்ளி, கல்லூரிகளை திறப்பதற்கு தடை தொடரும். செப்டம்பர் 21 க்கு பிறகு ஆன்லைன் வகுப்புகள் நடத்த 50 சதவீத ஆசிரியர்கள் பணியாளர்களை பள்ளிக்கு அழைக்கலாம்.. செப்டம்பர் 21 ஆம் தேதிக்கு பிறகு 9 – 12 ஆம் வகுப்பு மாணவர்கள் பெற்றோர் அனுமதியுடன் ஆசிரியர்கள் வழிகாட்டுதல் பெற  பள்ளிக்கு வரலாம். ஆனால் கட்டாயமல்ல என்று அறிவித்துள்ளது.

Categories

Tech |