நாடு முழுவதும் மெட்ரோ சேவையை தொடர மத்திய அரசு அனுமதி அளித்து வழிகாட்டு நெறிமுறைகளை வழங்கியுள்ளது.
நாட்டில் ஊரடங்கு நான்காம் கட்ட ஊரடங்கு தளர்வு வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது. மத்திய அரசு வெளியிட்டுள்ள இந்த அறிவிப்பில், செப்டம்பர் 7ஆம் தேதி முதல் மெட்ரோ சேவையை தொடரலாம் என்று அறிவிப்பு வழங்கபட்டுள்ளது. நாடு முழுவதும் அரசியல் ரீதியான, கலாசார ரீதியான, சமூக ரீதியான கூட்டங்களுக்கு அனுமதி அளிக்கப்படும். ஆனால் 100 நபர்களுக்கு மேல் இருக்கக்கூடாது. 21 செப்டம்பர் முதல் இது நடைமுறைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அதே நேரத்தில் சமூக இடைவெளி நடவடிக்கை மேற்கொள்வதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. திறந்தவெளி அரங்குகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது. இதுவும் 21ம் தேதி முதல் அமலுக்கு வரும். பல்வேறு மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்களுடன் ஆலோசனைகள் நடத்தப்பட்டன. அந்த ஆலோசனைகளின் அடிப்படையில் என்ன நடவடிக்கை எடுக்கலாம் என குறித்து உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
பள்ளிக்கூடங்கள் செப்டம்பர் மாதம் 30-ஆம் தேதி வரை மூடப்பட்டிருக்கும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஆன்லைன் வகுப்புகள் நடத்துவது போன்ற விஷயங்களை தொடலாம். ஆனால் செப்டம்பர் 30 வரை பள்ளிகள் கல்லூரிகள் மூடப்பட்டு இருக்கும் என்பது முடிவு செய்திருக்கிறது. இந்த முக்கிய முடிவுகளை உள்துறை அமைச்சகம் சற்று நேரத்துக்கு முன் அறிவித்திருக்கிறது.