Categories
தேசிய செய்திகள்

பயணிகள் விமான சேவைகளுக்கான தடை தொடரும் – மத்திய அரசு..!!

வெளிநாடுகளுக்கான பயணிகள் விமான சேவைகளுக்கான தடை தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது

கொரோனா வைரஸ் பாதிப்பின் காரணமாக கடந்த மார்ச் மாதம் நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து ஜூலை 1ஆம் தேதி முதல் தளர்வுகளுடன்  ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட நிலையில், 3ஆம் கட்ட ஊரடங்கு தளர்வு வருகின்ற 31ம் தேதியுடன் முடிவடைய இருக்கிறது. இந்த நிலையில் தற்போது மத்திய அரசு 4ஆம் கட்ட தளர்வுகள் குறித்து அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அதில், நோய் கட்டுப்பாடு பகுதிகளில் செப்டம்பர் 30ஆம் தேதிவரை பொதுமுடக்கம் நீட்டிக்கப்படுள்ளது. 4ஆம் கட்ட பொது முடக்க தளர்வுகளில், செப்டம்பர் 7-ஆம் தேதி முதல் நாடு முழுவதும் மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்படும். செப்டம்பர் 21 முதல் விளையாட்டு, பொழுதுபோக்கு, கலாச்சார அரசியல் நிகழ்வுகள் 100 பேருடன் நடத்தலாம்.

அதேபோல செப்டம்பர் 21 முதல் திறந்தவெளி திரையரங்குகள் செயல்படும். செப்.30 ஆம் தேதி வரை பள்ளி, கல்லூரிகளை திறப்பதற்கான தடை தொடரும். மேலும் வெளிநாடுகளுக்கான பயணிகள் விமான சேவைகளுக்கான தடை தொடரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது

 

Categories

Tech |