துபாய் மண்ணில் ஐபிஎல் போட்டியை எதிர் கொண்டிருக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு கொரோனா தொற்று முட்டுக்கட்டை போட்டிருக்கிறது.
பதிமூன்றாவது ஐபிஎல் தொடர் செப்டம்பர் 19-ஆம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்க இருக்கிறது. இன்னும் 20, 21 நாட்கள்தான் இருக்கிறது. இந்த சூழ்நிலையில்தான் சிஎஸ்கே அணி பின்னடைவான சில விஷயங்கள் சந்தித்துக் கொண்டிருக்கிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இரண்டு வீரர்கள் மற்றும் அவருடைய உதவியாளர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் கடந்த 21ஆம் தேதி துபாய் தனியாக ஒரு விமானம் மூலமாக துபாய்க்கு சென்றடைந்தார்கள்.
கொரோனா கால கட்டம் என்பதால் வெளிநாடுகளுக்குப் போகும் போது அவர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, தனிமைப்படுத்தப்படுகின்றார்கள்.அதன்படி கடந்த 20ஆம் தேதி துபாய் சென்ற சிஎஸ்கே வீரர்கள் நட்சத்திர ஓட்டலில் ஆறு நாட்கள் தனிமைப் படுத்தப் பட்டார்கள். அனைத்து வீரர்கள் மற்றும் அவர்களுக்கு உதவியாளர்களாக இருக்கும் அனைவருமே ஆறு நாட்கள் நட்சத்திர ஓட்டலில் தங்கி விட்டார்கள்.
இந்த சூழ்நிலையில் போட்டி தொடங்குவதற்கு முன்பாக அனைத்து வீரர்களும் பயிற்சி மேற்கொள்வது வழக்கம் என்ற அடிப்படையில் சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள் பயிற்சிக்கு செல்ல தயாராக இருந்தனர்.இந்த நிலையில் தான் அவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்த பரிசோதனை முடிவு வெளிவந்து ஒரு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வீரர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் அவர்கள் மேலும் ஒரு வாரம் தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்.
மற்ற அணி வீரர்கள் எல்லாமே பயிற்சி மேற்கொண்டு இருக்கக்கூடிய சூழ்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் நட்சத்திர ஓட்டலிலே மேலும் சில நாட்கள் தங்கி இருக்க வேண்டிய சூழலுக்கு ஆளாக்கப்பட்டு உள்ளார்கள்.அதே நேரம் தோனிக்கு அடுத்தபடியாக இருக்கக்கூடிய நட்சத்திர வீரர் சுரேஷ் ரெய்னா சொந்த, தனிப்பட்ட காரணங்களுக்காக இந்தியா திரும்பியுள்ளார். என்ன காரணம் என்று சொல்லப்படவில்லை ? அதற்கான அறிவிப்பு விரைவில் வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஐ.பி.எல்லில் பங்கேற்கும் மற்ற அணி வீரர்கள் எல்லோருமே பயிற்சியை தீவிரமாக மேற்கொண்டு இருக்கும் சூழலில் சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள் மட்டும் ஹோட்டலில் இருக்கக்கூடிய சூழல் இருக்கின்றது. அடுத்த சில பரிசோதனைகளில் அவர்களுக்கு நெகட்டிவ் என்று வந்தால் மட்டும் தான் பயிற்சி செல்ல முடியும். இது போன்ற பல முட்டுக்கட்டைகள் தான் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு முன்னிலையில் இருக்கிறது.
இந்த முட்டுக்கட்டைகளை தகர்த்தெறிந்து சென்னை சூப்பர் கிங்ஸ் இந்த வருடம் ஐபிஎல் போட்டியில் கோப்பையை வெல்ல வேண்டும் என்று சிஎஸ்கே அணியின் ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்போடு காத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் சிஎஸ்கே வீரர்கள் இந்த முட்டுக்கட்டைகளை தகர்த்தெறிந்து வெற்றி பெறுவார்களா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். சிஎஸ்கே அணியின் அடுத்த நகர்வு என்ன என்பதையும் ரசிகர்கள் உன்னிப்பாக கவனித்து வருகின்றனர்.