தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் இன்று ஞாயிற்றுக்கிழமை தளர்வு இல்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது.
தமிழகத்தில் கொரோனா தொற்று பரவலைத் தடுக்க ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் தளர்வில்லாத முழு ஊரடங்கை தமிழக அரசு நீட்டித்துள்ளது. இன்று ஐந்தாவது ஞாயிற்றுக்கிழமை ஒட்டி ஊரடங்கு கடைபிடிக்கப்படுகிறது. பால் மற்றும் மருந்து கடைகளுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஊரடங்கு ஒட்டி அத்தியாவசியப் பொருட்களை மக்கள் நேற்றே வாங்கியுள்ளனர்.
நாடு முழுவதும் மூன்றாம் கட்ட ஊரடங்கு தளர்வு நாளையோடு நிறைவடைய இருக்கும் நிலையில், மத்திய அரசு நேற்று நான்காம் கட்ட ஊரடங்கு தளர்வு காண வழிகாட்டு நெறிமுறைகளை நேற்று வெளியிட்டது. இது நாளை முதல் அமலுக்கு வர இருப்பது குறிப்பிடத்தக்கது.